ஹனு-மான்’ - விமர்சனம்
அஞ்சனாத்திரி கிராமத்தில் வசித்து வரும் நாயகன் தேஜா சஜ்ஜா, சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வருகிறார். இவரது அக்கா வரலட்சுமி சரத்குமார் தம்பிக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அதே  கிராமத்தில் ஊர்காவல்காரன் ஒருவன் மக்களிடம் வரி வசூல் செய்து ஊர் மக்களை காப்பாற்றுவதாக கூறிக் கொண்டு ஊர்  மக்களை கஷ்டப்படுத்துகிறான்.

அதே கிராமத்திற்கு வரும்  நாயகி  அம்ரிதா பார்த்ததும் காதல் கொள்கிறான் நாயகன் தேஜா சஜ்ஜா  சிறுவயது முதலே நாயகி வெற்றி பெறுவதற்கு துணையாக இருப்பவன்  ஒரு நாள் இரவில் நாயகியை கொள்ளையர்கள் கொலை செய்ய  துரத்த  நாயகிக்கு தெரியாம காப்பாற்றும் நாயகனை கத்தியால் குத்தி ஆற்றில் வீசி விடுகிறார்கள் . நீருக்கு அடியில்  ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுப்பதோடு, அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார்.

நாயகன் தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் ஊர் மக்களை விஷவாயு  வைத்து  கொலை செய்ய  முயற்சிக்கிறார். இறுதியில் நாயகன்  தேஜா சஜ்ஜா, ஊர் மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? எனபதே
’ஹனு-மான்’  படத்தின் கதை.
அனுமந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  தேஜா சஜ்ஜா அதற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார். காதல், ஆக்ஷன் , காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்து பாராட்டை பெறுகிறார். தெலுங்கு நடிகர் பாலய்யா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கிறார். தனக்காக அக்கா திருமணம்  செய்து கொள்ளாமல் இருப்பதை தெரிந்து கொண்டு கண் கலங்கும் காட்சிகளில் மனதில் இடம் பிடிக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார் அமிர்தா ஐயர்.படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாயகனின் அக்காவாக  நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் அமைதியான இருப்பவர் தம்பிக்கு ஒரு ஆபத்து என்றதும் அதிரடி காட்டுகிறார்.  இறுதி காட்சியில் நடிப்பை  கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.  தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாகவும், கலர்புல்லாகவும் இருக்கிறது.

ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இயக்குனர் பிரசாந்த் வர்மா கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக உள்ளது.

நடிகர்கள் :  தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய்,  ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா  கிஷோர், சமுத்திரக்கனி

இசை : அனுதீப் தேவ் , கெளர ஹரி, கிருஷ்ணா சௌரவ்

இயக்கம் ; பிரசாந்த் வர்மா

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

Comments

Popular posts from this blog