’அயலான் ’ -  விமர்சனம்
வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒரு கல் பூமியில் விழுகிறது. கீழே விழுந்த அந்த கல் வில்லனிடம் கிடைக்கிறது. அதனை வைத்து பூமிக்கு அடியில் துளையிட்டு ஸ்பார்க் என்ற கனிமத்தை எடுக்க முயற்சி செய்கிறார். இந்த விஷயம் ஏலியனுக்கு தெரியவர  அந்த கல்லை எடுக்க பூமிக்கு வருகிறது.

பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் இயற்கையை நேசிப்பவரான  சிவகார்த்திகேயன்  எந்த உயினத்திற்கும் தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். ஒருநாள் இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. அம்மாவின் வற்புறுத்தலால் சென்னைக்கு வேலை தேடி வரும் சிவகார்த்திகேயன் யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் இணைந்து வேலை செய்கிறார்

ஒரு கட்டத்தில் வில்லனால் தாக்கப்பட்டு மயக்கமடையும் ஏலியன் சிவகார்த்திகேயனால் காப்பாற்றப்படுகிறது.  இதனையடுத்து  ஏலியனின் பிரச்சனையை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கு உதவி செய்ய நினைக்கிறார் இறுதியில் சிவகார்த்திகேயன் வில்லனிடம் இருந்து அந்த கல்லை மீட்டு ஏலியனிடம் ஒப்படைத்தாரா? இல்லையா?  என்பதே  ’அயலான் ’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்  துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அச்டின் , காமெடி  என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். எலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.இவரின் குரல் குழந்தைகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு அழகாக வந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். யோகி பாபு, கருணாகரன் ஆகியோரது காமெடி காட்சிகள் ரசித்து சிரிக்க முடிகிறது. . பால சரவணனும் தனது பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சரத் கேல்கர் மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை இஷா கோபிகர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் உள்ளது.

அயலான் படத்தை தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிராஃபிக்ஸ் குழு செதுக்கியிருக்கிறது. ஏலியனை தத்ரூபமாகத் திரையில் காட்டியுள்ளது, அறிவியல் பூர்வமான கதையை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். இயக்குனர்  ரவிக்குமார்


நடிகர்கள் : சிவகார்த்திகேயன்,ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன்

இசை :  ஏ ஆர் ரகுமான்

இயக்கம் : ரவிக்குமார்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா & நாசர்

Comments

Popular posts from this blog