மெரி கிறிஸ்துமஸ்’ -  விமர்சனம்
காதலியை கொலை  செய்த குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும்  விஜய் சேதுபதி.மும்பையில் இருக்கும் வீட்டிற்கு வருகிறார்.  அன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இரவு உணவு  சாப்பிட உணவகம் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு கேத்ரினாவையும் அவரது 3 வயது மகளையும் சந்திக்கிறார். இருவருக்கும் ஒரு நட்பு ஏற்படுகிறது.
இருவரும் பேசிக்கொண்டே, அன்று இரவு ஒன்றாக ஊர் சுற்றுகின்றனர்.அதன் பின்னர் கத்ரினாவின் அழைப்பின் பெயரில் விஜய் சேதுபதி, கத்ரினா வீட்டிற்கு செல்கிறார். அங்கு கத்ரினாவின்  கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இறுதியில் கத்ரினாவின் கணவரை கொலை செய்தது யார் ? கொலைக்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா ? இல்லையா? என்பதே  ’மெரி கிறிஸ்துமஸ் கதை.

ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் விஜய் சேதுபதி இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்விஜய் சேதுபதி, இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது கதாபாத்திரம் ரசித்து பார்க்க முடிகிறது.

நாயகியாக நடித்திருக்கும்  கேத்ரினா கைஃப், தனது அனுபவ நடிப்பின் மூலம் அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்கிறார். ஒரு  பெண் குழந்தைக்கு  அம்மாவாக இவரது நடிப்பு ரசிக்க முடிகிறது.  இவரது கதாபாத்திரம்  படத்தில் பெரும் ட்விஸ்டாக இருக்கிறது.
கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கேற்ற சரியான தேர்வாக
உள்ளனர்.

ப்ரீத்தம் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.  டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது.மது நீலகண்டனின் ஒளிப்பதிவு கதைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

திரில்லர் கதைகளுக்கு பெயர் போன இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இந்த படத்திலும் அதனை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் படத்தின் முதல் பாதியில் சற்று மெதுவாக நகர்ந்தாலும்  இடைவேளைக்கு பிறகு படத்தின் கதை யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
 
நடிகர்கள் : மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், காயத்ரி, சண்முகராஜன்

இசை :  ப்ரீத்தம்

இயக்கம் : ஸ்ரீராம் ராகவன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog