கேப்டன் மில்லர்’ - விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை தமிழ்நாட்டின் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் தனுஷ் இவரது அண்ணன் சிவராஜ்குமார் சுதந்திரத்துக்காக போராடும்  இயக்கம் ஒன்றில் இருக்கிறார் 6 00 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுடைய  இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கோயிலைக் கட்டினார்கள், ஆனால் அவர்கள் அந்த கோயில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை .

ஆதிக்க சாதியினரிடம் அடிமைத்தனமாக வாழ்வதை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார். தனுஷ்  சுதந்திர போராட்டகாரர்களை பிரிட்டிஷ் அதிகாரியின்  கட்டாயத்தின் பெயரில் சுடுகிறார். பின்னர் மனவேதனை பட்டு சுட சொன்னவரை கொலை செய்துவிட்டு கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார்

தனுஷை  பிடிக்க பிரிட்டிஷ் ராணுவ தீவிரமாக முயற்சி செய்கிறது . இந்நிலையில், ஊர் கோயிலில் பழைமையான பொக்கிஷத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் எடுத்து  சென்று விடுகிறார்கள். இதை அவர்களிடம் இருந்து திருட ராஜா ஜெயபிரகாஷ் தனுஷை நாடுகிறார்.பொக்கிஷத்தை திருடிய தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் எடுத்து சென்றுவிடுகிறார்

இதனால் கோபமடையும் பிரிட்டிஷ்  அதிகாரி ராணுவத்தை கொண்டு ஊர் மக்களை சித்ரவதை செய்கிறார்கள்.. இறுதியில் தனுஷ்  ஊர் மக்களை  காப்பாற்றினாரா? இல்லையா? எனபதே ’கேப்டன் மில்லர்’ - படத்தின் கதை.
கேப்டன் மில்லர்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் அனுபவ நடிப்பை  கொடுத்திருக்கிறார். தனுஷ் மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொன்றிலும் தன் தனித்தன்மையை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.  சுதந்திர போராட்டகாரர்கள் சுடப்பட்ட பிறகு வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார்.
மருத்டுவராக  வரும் பிரியங்கா மோகன், வழக்கமான கதாநாயகியாக அல்லாமல் அழுத்தமான போராளி வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவு இருந்தாலும் , அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் கைதட்டல் மற்றும் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைக்கிறது. படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் “கில்லர் கில்லர்...” பாடல் ரசிகர்களை ஆட்டம் போட  வைக்கிறது. பின்னணி இசை மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திகாட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஆக்‌ஷன் காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிகளையும் அழகாக படமாக்கியுள்ளார்
சுகத்திரத்திற்கு முன்பு நடக்கும் சம்பவத்தை மைய கதையாக வைத்து ஒரு முழுநீள ஆக்ஷன்  படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்   படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்சன் கட்சிகளும் வெறித்தனமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஹாலிவுட் தரத்தில் ஒரு நிறைவான படம்

நடிகர்கள் : தனுஷ், டாக்டர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன்,இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ்

இசை :  ஜி.வி.பிரகாஷ்

இயக்கம் :  அருண் மாதேஸ்வரன்  

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM )

Comments

Popular posts from this blog