மூத்தகுடி’ - விமர்சனம்
மூத்தகுடி கிராமத்தில் பெரிய குடும்பத்தை சேர்ந்த  கே.ஆர்.விஜயா சொல்வதை ஊரே கேட்கிறது.   கே.ஆர்.விஜயா தன்  குடும்பம் மற்றும்  ஊர் மக்கள் சிலர் சேர்ந்து குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து சாராயம் குடிக்க செல்கிறார்கள். அங்கு ஏற்படும் பிரச்சனையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விடுகிறார்கள்.
கே.ஆர்.விஜயா, அவருடைய தம்பி யார் கண்ணன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.  இதனையடுத்து தனது ஊருக்குள் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது என்றும், சாராயத்தை விற்கவும் கூடாது என்றும் கூறுகிறார். அதனால், அந்த ஊருக்குள் யாரும் சாராயம் அருந்த அனுமதியில்லை.. அப்படியே யாராவது அருந்தி வந்தால் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.என்று கட்டுப்பாடு போடுகிறார்.

இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ்கபூர், மூத்தகுடியில் சாராய தொழிற்சாலை கட்டி, அந்த ஊர் மக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த நிலையில், கே.ஆர்.விஜயாவின் பேரக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள். அதில், முறைப்பெண் நாயகி அன்விஷாவை, தருண் கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பெரியவர்கள் பேசி வந்ததால், தருண் கோபி அன்விஷாவை  காதலித்து வருகிறார். ஆனால், அன்விஷாவுக்கு தருண் கோபியின் தம்பி பிரகாஷ் சந்திரா மீது காதல் கொள்கிறார்.  

இதனால்  தருண் கோபியின் தம்பி பிரகாஷ் சந்திராவிற்கிடையே மோதல் ஏற்படுகிறது.  இறுதியில் நாயகிக்கு யாருடன் திருமண நடந்தது என்பதே ’மூத்தகுடி’ படத்தின்கதை.
கதாநாயகர்களாக வரும் இருவரும் தங்களால் முடிந்த நடிப்பை இதில் கொடுத்துள்ளனர்.நாயகனாக நடித்திருக்கும் தருண் கோபி, நடிப்பில் ஆக்ரோஷத்தை காட்டியிருக்கிறார்  காதலுக்காக ஏங்குவது அதற்கு குறுக்கே யார்வந்தாலும் அதிரடி காட்டுவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

தருண் கோபியின் தம்பியாக நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார்.  நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை  நாயகியாக நடித்திருக்கும் அன்விஷாவின் நடிப்பு சொல்லுக்கு கொள்ளும் அளவிற்கு இல்லை

புண்ணகை அரசி கே.ஆர்.விஜயாவின் அனுபவமான நடிப்பு  படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆர்.சுந்தரராஜன் - சிங்கம் புலி காமெடி படத்தில் தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது.  யார் கண்ணன்,  ராஜ்கபூர் வழக்கமான வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்

ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை  கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது.  கந்தா ரவிசந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு துணை நிற்கிறது.

சாராயத்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு  எனபதை மைய கருத்தாக கொண்டு ஒரு கிராமத்து கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ரவி பார்கவன், தான் சொல்ல வந்த நல்ல கருத்தை மக்களிடம்  கொண்டு செல்வதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நடிகர்கள் : தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, கே ஆர் விஜயா, ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கபூர்

இசை : ஜே.ஆர்..முருகானந்தம்

இயக்கம் : ரவி பார்கவன்

மக்கள் தொடர்பு : மணவை புவன்
.

Comments

Popular posts from this blog