‘அவள் பெயர் ரஜ்னி‘ -  விமர்சனம்

சென்னையில் சைஜு குரூப். அவரது மனைவி நமீதா பிரமோத். இருவரும் ஒரு நாள் இரவு நண்பன் ஒருவர் வீட்டிற்கு வந்து திரும்பிச் .செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்க பெட்ரோல் வாங்க  செல்லும் சைஜு குரூப்.  மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.  அந்த கொலையை செய்தது  பெண்ணல்ல, ஒரு பேய் என அதைப் பார்த்த சிலர் கூறுகிறார்கள்...
இந்த கொலை குறித்து காவல்துறை அதிகாரியான  அஸ்வின்குமார் விசாரணை மேற்கொள்கிறார். மறுபுறம்  நமீதா பிரமோத் தம்பி காளிதாஸ்ஜெயராம், யார் இந்த கொலையை செய்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில் மர்ம உருவம் கொண்ட அந்த பெண்  நமீதா பிரமோத்  கடத்திவிடுகிறார்.

 இறுதியில் நாயகன் காளிதாஸ் ஜெயராம் சகோதரியை உயிருடன் மீட்டாரா? இல்லையா?  அந்தக் கொலையாளி யார் என்பதை  கண்டுபிடித்தாரா? இல்லையா.?என்பதே ‘அவள் பெயர் ரஜ்னி‘ படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும்  காளிதாஸ் ஜெயராம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக  இருக்கிறார். துணிச்சலாக கொலைகாரனை  தேடி  செல்வது  சகோதரியை காப்பாற்ற இவர்  எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. நாயகியாக வரும்  ரெபோ மோனிகா ஜான்  கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக உள்ளார்.
கணவனை இழந்த பெண்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நமீதாப்ரமோத்,இவருடைய  நடிப்பு கவனிக்கும் விதத்தில் உள்ளது.  காவலதிகாரியாக வரும் அஸ்வின்குமார் அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார்     ரஜ்னியாக நடித்திருக்கும் லட்சுமிகோபால்சாமி, நடிப்பு கவனிக்கவைக்கிறது. மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

4 மியூசிக்ஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் படத்தின் தரம் பன்மடங்கு உயர்கிறது.                                                    
அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் எழுதி இயக்கியிருக்கிறார் முதல் பாதி படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இயக்குனர் இரண்டாம் பாதியில்  ரஜ்னி‘  கதாபாத்திரம்  மூலம்  கதையின் வேகத்தை அதிகரித்து இருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக கொண்டு சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


நடிகர்கள் : காளிதாஸ் ஜெயராம், நமிதா ப்ரமோத், சைஜு க்ரூப், அஷ்வின் குமார், ரெபா ஜான்  கருணாகரன்

இசை : 4 மியூசிக்ஸ்...

இயக்கம் : வினில் ஸ்காரியா வர்கீஸ்...

மக்கள் தொடர்பு  : சதீஷ்  - சிவா ( AIM )

Comments

Popular posts from this blog