மதிமாறன்’ - விமர்சனம்

திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தபால்காரராக இருக்கும்  எம் எஸ் பாஸ்கருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர்  வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). இதில்  வெங்கட் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார்.  அப்பா போல தபால்காராக  ஆக வேண்டும் என்பது  இவரது ஆசை.ஊரில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய எதை பற்றியும்  கவலைப்படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார்.  
ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து   எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், பெண்கள் காணாமல் போவதும் தொடர்கிறது.  தனது அக்காவை தேடி சென்னை வரும் நாயகன் வெங்கட் செங்குட்டுவன், காணாமல் போன ஒரு பெண்ணின் பெற்றோரை சந்திக்கிறார்.
தனது கல்லூரி தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யா உதவியோடு களத்தில் இறங்குகிறார். இறுதியில் நாயகன் வெங்கட் செங்குட்டுவன் உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’மதிமாறன்’ படத்தின் கதை.
நெடுமாறன் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், முதல் படம் போல் அல்லாமல்  எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேற எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது.  வெங்கட். நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தை பிடிப்பார்

நாச்சியார், லவ் டூடே ப்டங்ககளில் நடித்து தனக்கான இடத்தை பிடித்த  இவானா இந்த படத்திலும் முக்கியமாக கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் அமைதியாக நடித்து படம் பார்ப்பவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும்,  நடிப்பிலும் கவனம்  பெறுகிறார்.  வெங்கட்  தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பின்  மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றனர்.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடுகள் கேட்கும் ரகம் பின்னணி  இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பர்வேஸின் ஒளிப்பதிவு  கதை ஓட்டத்திற்கு  துணை நிற்கிறது.

அழகான ஒரு வாழ்வியலை கொண்டு வந்து கண்முன்னே நிறுத்தி இருக்கிறார். அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்  அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு தேடுதலை படம் முழுக்க வைத்திருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

நடிகர்கள் :  வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பவா செல்லதுரை

இசை : கார்த்திக் ராஜா

இயக்கம் : மந்திர வீரபாண்டியன்

மக்கள்தொடர்பு: யுவராஜ் 

Comments

Popular posts from this blog