ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானின் ரசிகை
-----------------------------------------------
இயக்குனர் ஏஜே. சுஜித் இயக்கிய பிரியமுடன் பிரியா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் லீஷா எக்லேயர்ஸ்.
தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் கண்மணி சீரியலில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து  அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார்.
ஷாருக்கானின் ரசிகையான லீஷா எக்லேயர்ஸ் எப்படியாவது ஷாருக்கான் படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற  மிகுந்த ஆசையில் இருந்த லீஷாவிற்கு  அப்போது ரெட் சில்லீஸ்  புரொடக்ஷன்னில் அட்லியின் இயக்கத்தில்,   ஜவான் படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய  கதாபாத்திரம் என்றாலும்  ஷாருக்கான் அவர்களின் மீது கொண்ட அன்பின் மிகுதியால்  நடித்து  ஷாருக்கானின் நன்மதிப்பை பெற்றார்.

தற்பொழுது மணிதீப் எண்டர்டைண்ட்  பேனரில்,ஷங்கர்  இயக்கத்தில் ரைட் என்ற திரைப்படத்தில்  தெலுங்கு  பிக் பாஸ் மூலம் பிரபலமான கௌசல் மண்டாவுக்கு ஜோடியாக    லீஷா எக்லேயர்ஸ் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படத்தின் ரீ மேக் தான் இந்த ரைட் திரைப்படம். இப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. 

இப்படத்தின் மூலம் தமிழ் , தெலுங்கில் முன்னணி நடிகையாக லீஷா எக்லேயர்ஸ் வருவார் என்பதில் ஐயமில்லை.

Comments

Popular posts from this blog