ஜிகிரி தோஸ்த் -  விமர்சனம்

ஷாரிக் ஹசன், அறன்,  விஜே ஆஷிக் மூவரும் நல்ல நண்பர்கள்  டெரெரிஸ்ட்  ட்ரேக்கர்   என்ற கருவி கண்டுபிடிக்கிறார்  இந்த கருவி  மூலம் 500.மீட்டர் தூரத்திலிருந்து யார் போனில் பேசினாலும் ஒட்டு கேட்டு  முடியும் கல்லூரியில்  அதை செய்து காட்ட முயலும்போது கருவி பழுதாகிறது  ஆசிரியரால் அவமானப் படுத்தப்படுகிறார் அரண்

அறனை  சமாதானப்படுத்துவதற்காக  நண்பர்கள் ஷாரிக், ஆஷிக் இருவரும் காரில் வெளியே அழைத்து செல்கிறார்கள். அப்போது  தொழில் அதிபர் மகளான  பவித்ரா லட்சுமியை சிலர் காரில் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். அவரை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் மூவரும் ஈடுபடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் அறன் . கண்டுபிடித்த கருவியின் உதவியுடன் பவித்ராவை கடத்தியவர் போனை ஒட்டு கேட்க  நண்பர்களுக்கு  அது மிகப்பெரிய அதிச்சியாக  இருக்கிறது.  இந்த கடத்தலில் அமைச்சர் மற்றும் காவல் துறைக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.. இறுதியில்  ஷாரிக் ஹசன், அறன் .ஆர். வி, விஜே ஆஷிக் ஆகிய மூவரும் பவித்ராவை உயிருடன் மீட்டார்களா? இல்லையா/ என்பதே ’ஜிகிரி தோஸ்த்’  படத்தின் கதை.
கதை நாயகர்களாக நடித்திருக்கும் ஷாரிக் ஹசன், அறன் .ஆர். வி, விஜே ஆஷிக்  ஆகிய மூவரின்  நடிப்பும்  சிறப்பாக இருக்கிறது.  ஷாரிக்  காதலியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
கடத்தப்படும் பெண்ணாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாகி இருக்கிறார். ரவுடி அர்ஜுனனாக வரும் சிவம்  வில்லத்தனத்தில்  மிரட்டுகிறார்  கே. பி. ஒய்.சரத் வில்லனுக்கு அடியாளாக நடித்திருக்கிறார். 

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னை இசை கதையோடு பயணிக்கிறது. சரண் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.

வித்தியாசமான கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அறன் .ஆர். வி நிறைய விஷயத்தை சொல்ல நினைத்த இயக்குனர் அதை இன்னும் விறுவிறுப்புடன் கொடுத்திருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்  ஒட்டு கேட்கும் கருவியால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : ஷாரிக், அரண்.வி., ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, சிவம்,

இசை :  அஸ்வின் வினாயகமூர்த்தி

இயக்கம் :  அறன் .ஆர். வி

மக்கள் தொடர்பு : வெங்கடேஷ்

Comments

Popular posts from this blog