’வட்டார வழக்கு’ - விமர்சனம்
1980 கால கட்டத்தில்  மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை  இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருட பகை இருக்க, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ  மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார்.

இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்நிலையில் சந்தோசுக்கும்,  ரவீனாவுக்கும் காதல்  மலர்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது அதிக காதலில்.இருக்கிறார்.ஒரு  கட்டத்தில் ரவீனா தற்கொலை செய்து கொள்கிறார்.  இறுதியில் நாயகன் சந்தோஷ் ரவீனாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே   ’வட்டார வழக்கு’  படத்தின் கதை.
டூலெட் படத்தில்  நாயகனாக  சந்தோஷ் நம்பீராஜன் இப்படத்தில் ஒரு கிராமத்து முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரிவிதத்தில் கொடுத்துள்ளார். நாயகி  ரவீனா ரவி  அறிவொளி இயக்கத்தில் முதியோர்களுக்கு  எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கும் துறுதுறுப்பான கதாபாத்திரத்தில்  வருகிறார்.தோற்றத்தில் நடிப்பில் அந்த ஊர் பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

படத்தில் மற்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானவர்கள், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடைய நடிப்பு செயற்கைத்தனம் அற்ற வாழ்வியலாக இருப்பதோடு, படத்தின் தனி சிறப்பாகவும் பயணிக்கிறது.
இளையராஜாவின் இசையில்  பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. 1987 ம் காலக்கட்டத்தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் காட்சிகள் கண்முன் நிறுத்தியுள்ளார்.

1980 காலகட்டத்தில் கிராமத்து வாழ்க்கையில் நம்மையும்  சேர்த்து பயணிக்க வைக்கிறார் இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன். கரிசல் மண்ணின் காதல் மற்றும் மோதலை மையப்படுத்தி கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். இது போன்ற எதரார்த்த சினிமாக்கள் எப்போதாவதுதான் வரும் அந்த வகையில் இது சிறந்த கிராமத்து காதல் கதை.

நடிகர்கள் : சந்தோஷ நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்தி வீரன் வெங்கடேஷ்

இசை :  இளையராஜா

இயக்கம் : கண்ணுசாமி ராமசந்திரன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா ,ரேகா,  நாசர்

Comments

Popular posts from this blog