சபா நாயகன்’  -  விமர்சனம்
நாயகன் அசோக் செல்வன் 12வது  வகுப்பு படிக்கும் போது  சக மாணவியான கார் த்திகா முரளிதரனை ஒரு தலையாக காதலிக்கிறார். தன் காதலை கார்த்திகாவிடம் சொல்வதற்குள் அந்த காதல் தோல்வி அடைகிறது கல்லூரியில் படிக்கும் போது சாந்தினிவை காதலிக்கிறார்.

சாந்தினியும்  அசோக் செல்வனை காதலிக்க  ஒரு கட்டத்தில் சாந்தினி அசோக் செல்வனை விட்டு பிரிய  இந்த காதலும் தோல்வி அடைகிறது.  இதையடுத்து அகோக் செல்வன்  எம்பிஏ படிக்கும் போது மேகா  ஆகாஷ் மீது காதல் வருகிறது . ஒரு கட்டடத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். இறுதியில்  அசோக் செல்வன்  கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ்  இவர்களில் யாரை கரம் பிடித்தார் என்பதே  ’சபா நாயகன்’  படத்தின் கதை.
சபா கதாபாத்திரத்தில் நடித்தித்திருக்கும் அசோக் செல்வன் இதுவே நடித்த படங்களில் இருந்து  மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி, பருவ காதல் என  ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ற உடல்மொழி  வசன  உச்சரிப்பு என நடிப்பை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். காதல், ஆக்ஷன்,, ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் என மூன்று நாயகிகள், மூன்று பேரும் அழகிலும், நடிப்பும் அசத்துகிறார்கள்.  . ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்.அனைவரும் இளைஞர்களை ஈர்க்கும் ரகம்.இவர்களில் கார்த்திகாமுரளிதரனுக்கு இரட்டை வாய்ப்பு. இரண்டிலும் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.
அசோக் செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும் அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், அனீஷ் ஆகியோர் அசோக் செல்வனின் அக்காவாக  நடித்திருக்கும் பெண், மைக்கல் தங்கதுரை, மயில்சாமி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பும் அருமை
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள்  திரும்ப திரும்ப கேட்கும் ரகம் ,பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கால் கட்டத்திற்கு ஏற்றவாறு இருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.

மூன்று காலகட்டம் மூன்று காதல் கதையை மைய புள்ளியாக வைத்து ஒரு அழகான காதல் படத்தை  உருவாக்கியிருக்கிறார்  அறிகுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன்   இளைஞர்கள் கொண்டாடும் விதத்தில் காட்சிகள் மற்றும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ்,  அருண் , ஜெயசீலன், ஸ்ரீராம், விவியா சந்த்,

இசை : லியோன் ஜேம்ஸ்

இயக்கம் : சி.எஸ்.கார்த்திகேயன்

மக்கள் தொடர்பு : சதீஸ் குமார்

Comments

Popular posts from this blog