ஷாட் பூட் த்ரீ’  -  விமர்சனம்

ஐடி நிறுவனத்தில்  வேலை செய்யும் வெங்கட் பிரபு - சினேகா தம்பதிகளுக்கு ஒரே மகன் கைலாஷ், தொடர்ந்து  வேலை வேலை என்று அலையும் இவர்களுக்கு கைலாஷை  கண்காணிக்கவும் நேரமில்லை. இதனால்  கைலாஷ் தனிமையில் மிகவும் வேதனை அடைகிறார்  கைலாஷ்க்கு , ப்ரனிதி, வேதாந்த் என இரண்டு நண்பர்கள்  இருக்கிறார்கள்.  
இதே அப்பார்ட்மெண்ட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டியின் மகன் பூவையார்  குடும்ப சூழ்நிலை  காரணமாக  பள்ளிக்கு செல்லாமல் அந்த அப்பார்ட்மென்டில்  சிறு சிறு வேலை செய்து  வருகிறான். கைலாஷ் பிறந்தநாள் பரிசாக இவனுடைய நண்பர்கள் நாய் ஒன்றை பரிசாக தருகிறார்கள்.  

முதலில் வீட்டில் நாயை வளர்க்கக்கூடாது என்று கூறும் சினேகாவை ஒரு வழியாக சமாளித்து அந்த நாயை வளர்க்க சம்மதம் வாங்கிவிடுகிறார்கள் . ஒரு நாள் இவர்கள் வளர்க்கும் நாய் திடீர் என காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து கைலாஷ் நாயை தேடுகிறார். இறுதியில் நாய் கிடைத்ததா? இல்லையா?  என்பதே   ‘ஷாட் பூட் த்ரீ’  - படத்தின்கதை.
சிறுவன் கைலாஷ் பெற்றோர்களாக நடித்திருக்கும் சினேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கதாபாத்திரத்திற்கான  சரியான தேர்வாக இருப்பதோடு  அளவான நடிப்பின்  மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
.கைலாஷ் ஹிட்,  ப்ரனிதி, வேதாந்த் இந்த மூன்று சிறுவர்களும் சம கால சிறுவர்களை கண் முன் காட்டி விடுகிறார்கள். சிறுமி பிரணித்தி நடிப்பில் மட்டும் கொஞ்சம்  முதிர்ச்சி தெரிகிறது. சிறுவன் பூவையார் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது..

ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகி பாபு  காட்சிகள் குறைவாக இருந்ததாலும் படம் முழுவதும் வருவது போல் இருக்கிறது . சிவாங்கி, சாய் தீனா, இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் சுகேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் . பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது
இன்றைய கால் கட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் செய்யவேண்டிய விஷயத்தையும் அழுத்த திருத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் படத்தின் முதல் பாதியில் குழந்தைகள் உலகத்திற்குள் நம்மை கொண்டு செல்பவர் இரண்டாம் பாதியில் சமூக பார்வையோடு கதையை கையாண்டு இருக்கிறார்.

நடிகர்கள் : வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு, ப்ரனிதி, கைலாஷ், வேதாந்த் மற்றும் பூவையார்

இசை : ராஜேஷ் வைத்யா

இயக்கம் : அருணாச்சலம் வைத்தியநாதன்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Comments

Popular posts from this blog