ரத்தம்’ - விமர்சனம்
புலனாய்வு நிருபரான விஜய் ஆண்டனி மனைவி பிரசவத்தின் போது  இறந்து விடுகிறார்  இதனால்   மனதளவில் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி குடிக்கு அடிமையாகி தன் மகளுடன் வெளி ஊரில்  வாழ்ந்து வருகிறார்.  சென்னையில் அவரது நண்பரான வானம் பத்திரிகையின் ஆசிரியர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

விஷயம் அறிந்த விஜய் ஆண்டனி மீண்டும் பத்திரிகையாளராக பணியாற்ற மகளுடன் சென்னை வருகிறார். பத்திரிகை ஆசிரியரின் கொலை நடிகரின் வெறித்தனமான ரசிகரால் செய்யப்பட்டது என்று அனைவரும் நம்ப விஜய் ஆண்டனிக்கு மட்டும் சந்தேகம் ஏற்படுகிறது.

இதையடுத்து, அந்த கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, தனது நண்பர் மட்டும் அல்ல மேலும் இதே முறையில் மாவட்ட கலெக்டர் என பல கொலை சம்பவங்கள்  நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார்.  இறுதியில்  விஜய் ஆண்டனி கொலைக்கான காரணத்தை   கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே ‘ரத்தம்’  படத்தின் கதை.
புலனாய்வு நிருபராக  நடித்திருக்கும்  விஜய் ஆண்டனி எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.   கதாபாத்திரத்திற்கு  ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார்  மனைவி இழப்பு, மகள் மீது பாசம் , வேலை மீது பொறுப்பு என கச்சிதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
 
ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று  நாயகிகளும் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரமாக பயணித்திருக்கிறார்கள். மூன்று பேரும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல்  செய்திருக்கிறார்கள். மகிமா நம்பியார் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
நிழல்கள் ரவி, ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதைக்கு சரியான தேர்வாக இருக்கிறார்கள்  இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது  கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு  உள்ளது.

இதுவரை வந்த படங்களின் சாயல் சற்றும் இயலாத வகையில் ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன்  முழுக்க முழுக்க புதிய பாணியில், இதுவரை பார்த்திராத கிரைம் த்ரில்லர் படம் ஒன்றை அனைவரும் ரசிக்கும் கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் .


நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா சுவேதா, ஜான் மஹேந்திரன், நிழல்கள் ரவி

இசை : கண்னன் நாராயணன்

இயக்கம் : சி.எஸ்.அமுதன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா ரேகா, நாசர் (D’one)

Comments

Popular posts from this blog