இறுகப்பற்று - விமர்சனம்
விக்ரம் பிரபு – ஷ்ரத்தா தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஷ்ரத்தா  குடும்ப நல உளவியல் ஆலோசகராக இருக்கிறார்.  ஷ்ரதா ஸ்ரீநாத், விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் தனது மனைவி தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ளாத அவரது கணவர் விக்ரம் பிரபு மனைவி மீது கோபமடைவதோடு அவரை விலகி செல்கிறார்.
விதார்த் தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். கணவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடையும் அபர்ணதி, மனோதத்துவ நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் உதவியை நாடுகிறார்.
ஸ்ரீ – சானியா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான புதிதில் அழகாக செல்லும் இந்த திருமண வாழ்க்கை போக போக பிடித்தம் இல்லாமல் இருவருக்குள்ளும் சண்டை, சச்சரவு, மோதல் என செல்கிறது. இந்த இரு தம்பதியினரும் தங்களின் இன்னலுக்காக ஷ்ரதாவிடம் கவுன்சிலிங்க் செல்கின்றனர். இரு தம்பதியினருக்கும் தன்னால் முடிந்த கவுன்சிலிங்கை கொடுக்கிறார் ஷ்ரதா.
இறுதியில் இந்த இரு  தம்பதிகளின் பிரச்சனைகள் தீர்ந்ததா?, இல்லையா?  விக்ரம் பிரபு – ஷ்ரதா வாழ்க்கை என்னவானது என்பதே இறுகப்பற்று படத்தின் கதை.
நடிகர் விக்ரம் பிரபு, தனது கேரக்டரை மிக அழகாக செய்திருக்கிறார். தனக்கான காதல் எப்படி வேண்டும், தனக்கான அன்பு எப்படி வேண்டும் என்று கூறும் இடத்தில் கண் கலங்க வைத்து விடுகிறார். ஷ்ரத்த ஸ்ரீநாத், தம்பதிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மனோதத்துவ நிபுணர் வேடத்திற்கு  ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.
ரங்கீஷாக வரும் விதார்த் நடிப்பில் எதார்த்த நடிப்பை கொடுத்து அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார். பவித்ராவாக வரும் அபர்ணாதி   உடல் எடை கூட்டி அந்தப் பாத்திரத்தின் மதிப்பைக் கூட்டி அனுதாபத்தையும் அள்ளுகிறார்    உடலை ஏற்றி இறக்கி தனது கதாபாத்திரத்திற்காக உடலளவிலும் தனது முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அபர்ணதி. இளம் தம்பதிகளான ஸ்ரீ – சானியா ஜோடியின் நடிப்பும் மற்ற ஜோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது

கணவன் - மனைவி  இடையே ஏற்படக் கூடிய பிரச்சனை எந்த விதத்தில் வருகின்றன  என்பதையும் அந்த பிரச்னையை எப்படி தீர்க்க வேண்டும்  என்பதையும் அழகாக படமாக்கி இருக்கிறார்  இயக்குனர்  யுவராஜ் தயாளன்  சொல்ல வந்த கருத்தை அனைவரும் ஏற்கும் விதத்தில்  இயக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்


நடிகர்கள் : விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா, மனோ

இசை : : ஜஸ்டின் பிரபாகரன்

இயக்கம் : : யுவராஜ் தயாளன்

மக்கள் தொடர்பு : ஜான்சன்

Comments

Popular posts from this blog