லியோ ’ - விமர்சனம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற பகுதியில் வசிக்கும் விஜய் மனைவி த்ரிஷா, ,மகன், மகள்  என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.  அங்கு காபி ஷாப் ஒன்றை  நடத்தி வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் இவர் விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு நெருங்கிய நண்பராக வரும் கெளதம் வாசுதேவ் மேனன்.வனத்துறை அதிகாரியாக வருகிறார்.
ஒருநாள் தேடப்படும் குற்றவாளிகளான மிஷ்கின் மற்றும் சாண்டி கூட்டாளிகள்  விஜயின் காபி ஷாப்புக்குள் நுழைந்து விடுகிறார்கள். அப்போது விஜய் பிரச்சனை வேண்டாம் என்று பணத்தை கொடுத்து முடித்துவிட பார்க்கிறார். ஆனால், அவர்களின் அட்டகாசம் எல்லை மீறவே அவர்களை  துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகிறார்.விஜய் . இதனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. விஜய் தற்காப்புக்காக தான் இந்த கொலையை செய்தார் என்று நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுகிறார்.

இந்த செய்தி நாளிதழ்களில் வெளிவர, விஜய்யின் புகைப்படமும் அதில் வருகிறது. இதனை பார்த்த அர்ஜுன் மற்றும் அவரது அண்ணன் சஞ்சய் தத் ஆதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.. விஜய்யை தூக்கி வர இமாச்சல் வருகிறார் சஞ்சய் தத். இறுதியில் லியோ யார்?  விஜய்யை தேடி சஞ்சய் தத்  வர காரணம் என்ன? என்பதே ’லியோ ’ படத்தின் கதை.
விஜய்யின் நடிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு நடிப்பில் மிரட்டியுள்ளார். காதல், அன்பு, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே வேறுபாடு காண்பித்து நியாயம் செய்துள்ளார். முழு படத்தையும் தன் தோளில் சுமந்துள்ளார்.
விஜய்யின் மனைவியாக நடித்திருக்கும் த்ரிஷா அதற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.  வனத்துறை அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனன், கொடுத்த வேலையை சரியாக  செய்திருக்கிறார். சஞ்சய்தத், அர்ஜூன் .இருவருமே  அனுபவ  நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார்கள். மிஷ்கின், சாண்டி,மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ,மடானோ செபாஸ்டின், ஜார்ஜ் மரியான் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள் .
அனிருத் இசையில் ‘நான் ரெடிதான் வரவா’  பாடல் ஆட்டம் போட வைக்கிறது.  பின்னணி  இசையில் இன்னும் கவனம்  செலுத்தி இருக்கலாம்.  மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவிவு  இமாசலப்பிரதேசத்தின் அழகை   கண்முன் கொண்டு  வந்து காட்டியிருக்கிறார்..
 தன்  குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தந்தை எந்த எல்லைக்கும் செல்வான் என்கிற கருத்தை இதில் அழுத்தமாக வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் படத்தின் முதல் பாதியில்  விறுவிறுப்பாக செல்லும் கதை, . இரண்டாம் பாதியில் அதை தவற விட்டிருக்கிறது. இருப்பினும் விஜயின் நடிப்பும், ஆக்ஷனும் அதனை மறைத்து விடுகிறது.


நடிகர்கள் : விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின்

இசை : அனிருத்...

இயக்கம்  :  லோகேஷ்  கனகராஜ்

மக்கள்தொடர்பு : ரியாஸ் கே.அகமது

Comments

Popular posts from this blog