இசையமைப்பாளர்
சௌந்தர்யன் மகன்
எம்.எஸ்.அமர்கீத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்
குண்டான் சட்டி என்ற படத்திற்கு இசையமைத்திருக்கின்றார் எம்.எஸ்.அமர்கீத்.  படத்தின் தலைப்பை கேட்டவுடனே இது அனிமேஷன் படம் தானே என்று கேட்க வரும். சாதாரணமாக ஸ்டார் வேல்யூ உள்ள எந்த படத்திற்கும் சளைத்தது அல்ல என்ற விதத்தில் 
எம்.எஸ் அமர்கீத்  இசைவளம் இருக்கின்றது. 

சிட்டுக்குருவி போல வட்டமடிப்போம் நாங்க...

ஓட ஓட விரட்டி பிடிப்போம் வெள்ளாட்ட நாங்க...

குண்டான் சட்டி குண்டான் சட்டி...

என்ற மூன்று பாடல்களும்  கேட்டவுடன் மனதை பற்றிக் கொள்ளும் பாடல்களாக இருக்கின்றது.

ரஜினி நடித்தும் அனிமேஷன் படம் வந்திருக்கின்றது. ஆனால் மனதை மயக்கும் பாடல் வந்திருக்கும் ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும். 

பின்னணி இசையை சொல்லவே வேண்டாம் புதிய கோணத்தில் செவியில் சிதறவிடுகின்றார்.

 மொத்தத்தில்  திரைப்பட இசை உலகிற்கு அமர்கீத் ஒரு அமர்க்களமான புதுவரவு.

- வெங்கட் பி.ஆர்.ஓ

Comments

Popular posts from this blog