800’ - விமர்சனம்
கிரிக்கெட்டில்  800 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் சாதனை புரிந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே ஒரு தமிழ் வீரர் முத்தையா முரளிதரன். இவரின் வாழக்கையை சொல்லும் படமாக வந்துள்ளது 800 திரைப்படம். 800 என்பது முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் தொடர்களில் வீழ்த்திய சாதனை விக்கெட்டுக்களின் எண்ணிக்கை. மொத்தத்தில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன்.சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எப்படி இலங்கை அணியில் சேர்ந்தார்.

கிரிக்கெட் அணியில் உள்ள பிரச்சனை மற்றும் இலங்கையில் உள்ள அரசியல் ஆகியவற்றை எப்படி கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் எனபதே  ’800’  படத்தின் கதை.
ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதுர் மிட்டல் முரளிதரனாக நடித்திருக்கிறார். சிறப்பாக பந்துவீச்சுப் பயிற்சியெல்லாம் பெற்று கடுமையாக உழைத்திருக்கிறார். பாத்திரமாகவே உருமாற மெனக்கெட்டிருக்கிறார்.
முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் வேடத்தில் நடித்திருக்கும் மஹிமா நம்பியார் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும்  சிறப்பான நடிப்பை  கொடுத்திருக்கிறார்.

 முரளிதரனின் அப்பாவாக வேலராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி ஆகியோர் பாசமான குடும்பத்தினர்களாக வருகிறார்கள். நாசர் முரளிதரனின் சாதனையை விவரிக்கும் விவரிப்பாளராக வருகிறார்.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நரேன் நடித்து அசத்தியிருக்கிறார்.அர்ஜுன ரணதுங்கா வேடத்தில் நடித்திருக்கும் கிங் ரத்தினம், அப்படியே அவரைப் போலவே இருப்பதோடு, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றார் போல் படம் பிடித்து  காட்டியிருக்கிறார்..

இயக்குநர் ஸ்ரீபதி முத்தையா முரளிதரனி வாழ்க்கையை முடிந்த வரை சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களிடம் நம்பிக்கையை இந்த படம் விதைக்கிறது. இப்படத்தில் அவரின் வாழ்க்கையைப் பற்றி யாரும் அறிந்திடாத பல விஷயங்களை இப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.


நடிகர்கள் : மதூர் மித்தல், மஹிமா நம்பியார், நரேன், கிங் ரத்தினம், நாசர், வடிவுக்கரசி, ரித்விகா, வேல ராமமூர்த்தி

இசை : ஜிப்ரான்

இயக்கம் : எம்.எஸ்.ஸ்ரீபதி

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா ரேகா, நாசர் (D’one)

Comments

Popular posts from this blog