பான்–இந்திய நட்சத்திரம் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் 44 வயதை அடைந்தார். ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் சலார் நட்சத்திரத்தின் 230 அடி கட்–அவுட்டை ரசிகர்கள் அற்புதமாக அமைத்துள்ளனர்.
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய நட்சத்திரமான ரெபெல் ஸ்டார்  பிரபாஸ் இன்று (அக்டோபர் 23, 2023) 44 வயதை எட்டுகிறார்.
பிரபாஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில்  ரசிகர்கள் பிரமாண்டமான 230 அடி கட்அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். நாட்டிலேயே மிகப்பெரிய கட்-அவுட் அமைப்பாக இது இருக்கும் என்று தெரிகிறது.
கட்அவுட் கட்டும் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog