‘கிங் ஆஃப் கொத்தா’ -  விமர்சனம்
கொத்தா” என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி சபீர் அங்கு கச்சா உள்ளிட்ட போதை வியாபாரத்தை செய்து வருகிறார். அந்த ஊருக்கு வரும் புதிய போலீஸ் அதிகாரி பிரசன்னா, ஷபீரின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து, அவரைப் பற்றி விசாரிக்கிறார். கொத்தா இதற்கு முன் துல்கர் கையில் இருக்க அவருடைய நண்பராக இருந்தவர் தான் இந்த சபீர் என்பது தெரிய வருகிறது.
ஒரு கட்டத்தில இவர்களுக்குள் விரோதம் உண்டாகிறது. பின்னர் துல்கர் காணாமல் போய்  விடுகிறான். தன்னை கேட்க யாரும இல்லை என்ற தைரியத்தில் சபீர்  மக்களை துன்புறுத்துகிறான். திடீரென்று  துல்கர் திரும்பி வந்து மக்களையும் குடும்பத்தையும் ரவுடி சபீரிடம் இருந்து காப்பாற்றுகிறார். இறுதியில்   “கொத்தாவை ” கைப்பற்றியது யார்? என்பதே ‘கிங் ஆஃப் கொத்தா’  படத்தின் கதை.
ராஜுவாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் படம் தொடங்கி சிறிது நேரம் கழித்து திரையில் தோன்றினாலும் அவர் தோன்றிய பிறகு கதை விறுவிறுப்பாக நகர்கிறது. துல்கர் ஆக்ட்டிங் நல்ல வகையில் அமைந்தது என்று சொல்லலாம்
கண்ணன் பாய் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஷபீர், கொடுத்த வேலையை 200 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் செய்திருக்கிறார். துல்கரும், சபீரும் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிரட்டல்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரசன்னா கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்.

துல்கர் சல்மானின் தந்தையாக நடித்திருக்கும் ஷம்மி திலகன், சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்தர் ஆகியோரின் வேடங்கள் கதையின் ஓட்டத்திற்கு  சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி  ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் ஆகியோரது இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.. பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.

கே ஜி எப் பாணியில்  ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி ப்டத்தின் முதல் பகுதியை  விட   இரண்டாம்  பகுதி விறுவிறுப்பாக  இருக்கிறது. நல்லவனுக்கு - கெட்டவனுக்கு இடையே  நடக்கும் போராட்டத்தை நட்பின் மூலம் அழகாக சொல்லியிருக்கிறார்  
நடிகர்கள் :  துல்கர் சல்மான் ஐஸ்வர்யா லட்சுமி சபீர் ஷம்மி திலகன் அனிகா சுரேந்திரன் ரித்திகா சிங். கோகுல் சுரேஷ் பிரசன்னா

இசை : ஜேக்ஸ் பிஜாய்,ஷான் ரஹ்மான்

இயக்கம் : அபிலாஷ் ஜோஷி

மக்கள் தொடர்பு : சதீஷ் - சிவா (AIM )

Comments

Popular posts from this blog