ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’  -  விமர்சனம்
 நாயகி நபிஷா சிங்கப்பூரில் உள்ள ஒரு  டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நாயகிக்கு அந்த  நிறுவனத்தின்  மூலம்   வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது,  சென்னை வந்த நாயகி தன் மருந்தகம் நடத்தும் நண்பரை சந்திக்கிறார் அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார்.

தன்னை ஏமாற்றிய இயக்குனரை  தேடி பழிவாங்க என்னும்  தயாரிப்பாளர் சைக்கோ ஜோ ஜியோவன்னி சிங்க்கு உடல் சோர்வுக்காக மாத்திரை சாப்பிட்டு படுக்கிறார். இதனையடுத்து  சில நாட்கள் கடந்த நிலையில்  சிங்கப்பூரில் மருத்துவ மனையில் சிகிச்சை. பெறுகிறார்  ஜோ ஜியோவன்னி சிங் .  திடீரென்று 2 டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.

 மறுபக்கம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா  நபிஷா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார். அதன்படி, ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்கிறார்.  இந்நிலையில்  ரியோ வீடு மாறி செல்ல அங்கு  இருக்கும்  சைக்கோ கொலைக்காரனிடம்  மாட்டிக்கொள்கிறார். இறுதியில் நாயகி  நபிஷா தம்பி ரியோவை சைக்கோ கொலைகாரனிடம் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’  படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் நடித்திருக்கும் ரியோ ராஜ் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ், கம்பீரமாக நடித்திருக்கிறார்.கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன்  டிராவல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இயல்பாக நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் ஜோ ஜியோவானி சிங், வெளிநாட்டு நடிகர் போல் இருந்தாலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர்  படத்தை பார்த்து   இவர் அழுகும் காட்சியில் நமக்கு  சிரிப்பு வருகிறது.

இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.


Comments

Popular posts from this blog