அடியே’ -  விமர்சனம்

நாயகன் ஜீ.வி. பிரகாஷ்  சிறுவயதில் தன் பெற்றோரை இழந்துவிடுகிறார். நண்பர்களுடன் வளர்ந்துவரும் ஜீ.வி. பிரகாஷ்க்கு வாழவே பிடிக்காமல் போகிறது. தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகன் ஜிவி பிரகாஷ், டிவியில் தனது பள்ளி பருவ காதலி கெளரி கிஷனை பார்க்கிறார். அவர் சொல்லும் ஒரு விஷயத்தால் மீண்டும் வாழ நினைப்பவர், அவரை மீண்டும் சந்திக்க முயற்சிக்கிறார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு வேலை பார்க்கும்  ஆராச்சி  நிலையத்தில் இருந்து  ஒரு  முக்கியமான பொருள் காணாமல் போகிறது .ஜிவி பிரகாஷ் தன் காதலை எப்படியாவது கெளரிரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பவர், அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கி மயக்கமடைகிறார்.

கண் விழிக்கும் போது வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். யாரிடம் பேச வேண்டும் நினைத்தாரோ அவரே மனைவியாக இருக்குறார். இறுதியில்  ஜீ.வி. பிரகாஷ் நிஜ உலகத்தில் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா?  வெங்கட் பிரபுவிற்கு காணாமல் போன பொருள் கிடைத்தாரா? இல்லையா? என்பதே ’அடியே’  படத்தின்கதை.
ஜீவி பிரகாஷ் ஜீவா மற்றும் அர்ஜுன்   இரண்டு வேடங்களிலும் கச்சிதமாக பொருந்துகிறார் ஜிவி பிரகாஷ் குமார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ் நடிப்பு அருமை

96 படத்தில் இளைஞர்களைக் கவர்ந்த கெளரிகிஷன் மீண்டும் அதுபோலவே திரும்ப வந்திருக்கிறார். இயல்பான நடிப்பின் மூலம்  ரசிகர்களை கவர்கிறார். நண்பராக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், வழக்கம் போல் சிரிக்க வைக்கிறார்.கெளதம் மேனனாக நடித்திருக்கும் வெங்கட் பிரபு, தன்னை வேறு யாரும் கிண்டல் செய்து விட்டாள் கூடாது என்பதற்காக  தன்னை தானே நக்கல் அடித்துக் கொள்ளும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் அனைத்து பாடல்களும், கேட்கும் ரகம்,  பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்.

சிக்கலான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து  படம் பார்க்க வருபவர்களை மேலும்  குழப்புவதற்காக இது மாதிரியான ஒரு படத்தை  இயக்கியிருக்கிறார். விக்னேஷ் கார்த்திக் ,படத்தில் கதை என்ன என புரியாமல் பார்வையாளர்கள் தடுமாறும்  விதத்தில் இருக்கிறது .பொழுது போக்க  திரையரங்கம் வ்ருபவர்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே இந்த கதை புரியும்

நடிகர்கள் : ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி கிஷன்,  வெங்கட் பிரபு,  ஆர் ஜே விஜய் , மதும்கேஷ் பிரேம்

இசை : ஜஸ்டின் பிரபாகரன்

இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog