’ஹர்காரா’ - விமர்சனம்
தேனி மாவட்டத்தில் உள்ள கீழ் மலை எனும் கிராமத்தில் இருக்கும்  அஞ்சல் அலுவலகம் ஒன்றில் புதிதாக வேலைக்கு  சேர்கிறார் காளிவெங்கட் .இவருக்கு  மலை கிராமத்தில் பணியில் சேர்ந்ததிலிருந்து ஏராளமான தொந்தரவுகள் இருப்பதால் விரைவில் பணி மாற்றம் செய்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும்  நினைக்கிறார். ஆனால் மேல் அதிகாரியோ அங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவு  போடுகிறார்.
தபால்காரான  காளி வெங்கட், அதற்காக, அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் போடுவதோடு, அதை கிராம மக்களுக்கு தெரியாமல், அவர்கள் மூலமாகவே செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார்.இந்த சூழ்நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஷ்வரன் என்ற ஹர்காராவை பற்றி தெரிந்து கொள்கிறார். இறுதியில் யார் இந்த ஹர்காரா ?  ஹர்காராவை மக்கள் காவல் தெய்வமாக கொண்டாட  காரணம் என்ன ?  ? எனபதே   ’ஹர்காரா’ படத்தின் மீதிக்கதை. கதை.
தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல தனது இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். 33 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனது நிலையை சிறப்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். ஊர் மக்களிடம் மாட்டிக்கொண்டு இவர் படும்பாடு சிரிப்பை  வரவழைக்கிறது.

மாதேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.  150 வருடங்களுக்கு முன்பு தபால்காரர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய பணி எத்தகைய சிரமம் வாய்ந்தவையாக இருக்கும், என்பதை தனது நடிப்பில் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கவுதமி செளத்ரியின் குறைவாக காட்சிகள் என்றாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்திருக்கும் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ராம் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு பெரும் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. ஒளிப்பதிவாளர்கள் பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் இருவரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மலை பகுதிகளை அழகாக படமாக்கி இருக்கிறார்கள்

தபால்காரர்  என்பவர் கடிதம் மட்டும் தருபவர்மட்டும்  இல்லை மக்கள் தங்கள் வீட்டின் ஒரு ஆளாக பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, . திரைக்கதை மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்காகான மிகைப்படுத்தல் இல்லாமல் எதார்த்தமாக உள்ளது

நடிகர்கள் : ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், கௌதமி சவுத்ரி, 'பிச்சைக்காரன்' மூர்த்தி

இசை : ராம் சங்கர்

இயக்கம் : ராம் அருண் காஸ்ட்ரோ, .

மக்கள் தொடர்பு : சதீஷ் - சிவா (AIM )
 

Comments

Popular posts from this blog