பார்ட்னர்’ -  விமர்சனம்
ஊரில் நாயகன் ஆதி சொந்த தொழில் தொடங்குவதற்காக வாங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப தர முடியாமல் போகிறது. ஆதியிடம் பணம் கொடுத்தவரோ குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் உன் தங்கையை திருமணம் செய்துகொள்வேன் என்கிறார். தன் தங்கையின் வாழக்கையை காப்பாற்ற பணத்திற்காக சென்னைக்கு வருகிறார் நாயகன் ஆதி.

சென்னையில் தன் நண்பன் யோகிபாபுவிடம் உதவி கேட்கிறார்  ஆதி, யோகிபாபு தான் வேலை செய்யும் இடத்திலேயே ஆதிக்கு வேலையும் வாங்கி கொடுக்கிறார், ஆனால் அது ஒரு திருட்டு கம்பெனி என்பது பிறகுதான் ஆதிக்கு தெரியவருகிறது. இந்நிலையில் விஞ்ஞானி பாண்டியராஜிடம் இருக்கும் சிப்பை திருடி தருமாறு ஒரு கொள்ளை கும்பல் யோகி பாபு மற்றும் ஆதியிடம் பேரம் பேசுகிறது.

அந்தச் சிப்பை திருடுவதற்காக ஆதியும், யோகி பாபு பாண்டியராஜனின் ஆய்வுக்கூடத்திற்குள் செல்கிறார்கள்  .அங்கு ஏற்பட்ட குளறுபடியால் யோகி பாபு, ஹன்சிகா மோத்வானியாக மாறிவிடுகிறார்.  இறுதியில்  ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, எனபதே பார்ட்னர்’  படத்தின் கதை.
ஆதி கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்  காதல், காமெடி  என அனைத்திலும்  சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.  ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி குறைவான காடுகள் இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கம் போல் உருவம் கேலி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் ஆணாக அசத்தியிருக்கும் ஹன்சிகா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.  ஜான் விஜய், ரோபோ சங்கர், தங்கதுரை, பாண்டியராஜன், ரவி மரியா, முனிஷ்காந்த், அகஸ்டியன் என அனைத்து நடிகர்களும் ரசிகர்களை சிரிக்க வைக்க  முயற்சி செய்திருக்கிறார்கள்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ராகன்,பின்னணி இசை குறையில்லை ஒளிப்பதிவாளர் சபீர் அஹமத் கதைக்கு ஏற்றபடி உள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் மனோஜ் தாமோதரன், மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை படத்தை கொடுத்திக முயற்சி செய்திருக்கிறார்.  முதல் பாதி திரை கதையை விட இரண்டாம் பாதியில் யோகி பாபு ஹன்சிகா மோத்வானியாக மாறிய பிறகு, கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் குழப்பமும் அதனை சுவாரசியமாக காட்சிப்படுத்தி இருக்கும்

நடிகர்கள் :  ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், பாண்டியராஜன்

இசை :  சந்தோஷ் தயாநிதி

இயக்கம் : : மனோஜ் தாமோதரன்

அம்மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog