கொலை’   -  விமர்சனம்
இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோ நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’கொலை
சென்னை உள்ள அப்பாட்மென்ட்டில் ஒன்றில் வசிக்கும் பிரபல மாடல் அழகியான மீனாட்சி செளத்ரி  மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த வழக்கை  காவல் துறையில் புதிதாக ஐ.பி.எஸ்.ஆன ரித்திகா சிங் விசாரிக்கிறார்.அவருக்கு புலனாய்வில் திறன் வாய்ந்த காவல்துறை அதிகாரியான விஜய் அண்டனி உதவுகிறார்.

இந்த வழக்கை விஜய் ஆண்டனி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள்  கிடைக்கின்றன இறுதியில் மீனாட்சியை  கொலை செய்தது  யார்?  கொலைகாரனை விஜய் ஆண்டனி &  ரித்திகா சிங் இருவரும் சேர்ந்து கண்டிபிடித்தார்களா? இல்லையா?  என்பதே ’கொலை படத்தின் கதை.
விசாரணை அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.வழக்கமான விஜய் ஆண்டனியாக இல்லாமல் பாதிநரைத்த முடியுடன் தோற்றத்தில் வேறுபாடு காட்டியிருப்பதோடு கூர்ந்த பார்வை கம்பீர உடல்மொழியுடன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
வழக்கை விசாரிக்கும் துடிப்பான இளம் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். லைலா என்ற மாடல் அழகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி சர்வதேச மாடல் அழகிக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருப்பதோடு மட்டுமின்றி தனது நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், ராதிகா என கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கிரிஷ்கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது   சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

'விடியும் முன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி கே. குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கொலை' ரெகுலர் க்ரைம் த்ரில்லர் ஜானர் படம் என்றாலும் அதை இயக்குநர் பாலாஜி குமார் வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog