டைனோசர்ஸ்’ - விமர்சனம்
வடசென்னையில் கணவர் இல்லாத ஜானகிக்கு  அட்டு ரிஷி (அன்னான் ) மற்றும்   உதய் கார்த்திக் (தம்பி) இரண்டு  மகன்கள். இருக்கிறார்கள்  ரிஷியின் உயிர் நண்பன் மாறா, பிரபல ரவுடியான மானக்‌ஷாவிடம் அடியாளாக இருந்தவர்  இந்நிலையில் திருமணம் ஆனதும் மானேக்‌ஷாவிடம் இருந்து வெளியே வர முடிவு செய்கிறார்.
மாறா ரவடியாக இருந்தபோது செய்த ஒரு கொலைக்காக, பல மாதங்கள் கழித்து மாறா மற்றும் அவரது கூட்டாளிகள்  சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட . தனது நண்பன் மாறாவிற்காக அந்தக் கொலைப் பழி ஏற்று  சிறை செல்கிறார் அட்டு ரிஷி.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் மனைவியின் சகோதரர் அருண் இவர் ஒரு ரெளடி. இவரிடம் சிக்கி படுகொலை செய்யப்படுகிறார் மாறா. இவரின் கொலைக்கு எதிர்பாராத விதமாக நாயகன் உதய் கார்த்திக்கும் ஒரு காரணமாகி விடுகிறார்.. இறுதியில் நாயகன் உதய் கார்த்திக் அண்ணனின் நண்பன் மாறா கொலைக்கு  காரணமானவர்களை  பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.’டைனோசர்ஸ்’

அறிமுக நாயகன் உதய் கார்த்திக், இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையானதை   மட்டும் கொடுத்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் உதய் கார்த்திக். நாயகி சாய் பிரியா தேவாவிற்கு படத்தில் காட்சிகள் குறைவாக இருந்ததாலும்  கொடுத்த  வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்  

ஆட்டு ரிக்ஷிக்கு  படத்தில் பெரியதாக காட்சிகள் இல்லை என்றாலும்  இருக்கும் காட்சிகளில் தன்னால் முடிந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். துரை  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாறா படத்தின் கதை நகர்விற்ற்கு துணை நிற்கிறார் படத்தில் சாகும்  தருவாயில்  இவருடைய நடிப்பு அருமை பாராட்டுக்குரியது.

வில்லன்களாக நடித்திருக்கும்  அருண்  - மானக்‌ஷா இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள். அம்மாவாக நடித்த ஜானகி, வழக்கமான அம்மாவாக இல்லாமல் நடிப்பில் தனித்து நிற்கிறார்.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி  இசை கதை ஒட்டகத்திற்கு ஏற்ப உள்ளது.  ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

வட சென்னையில் எடுக்கப்படும் வழக்கமான அடிதடி  படமாக இல்லாமல் வித்யாசமான முறையில்  படத்தை இயக்கி இருக்கிறார்  அறிமுக இயக்குனர் மாதவன்  முதல் பாதியில் இருக்கும் பரபரப்பு விறுவிறுப்பும் படத்தின் இரண்டாவது பாதியில் க சில குறைகளை தவிர்த்து பார்த்தால் இது ஒரு சிறந்த படம்தான்.  

Comments

Popular posts from this blog