சத்திய சோதனை’ - விமர்சனம்
நாயகன் பிரேம்ஜி  நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக இரு  சக்கர வாகனத்தில் வருகிறார். வரும் வழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார் உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைக்கிறார் அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், கைப்பேசி மற்றும் சிறிய தங்க செயின் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார்.
சங்குப்பட்டி காவல் நிலையத்தில் அந்த உடைமைகளை அவர் ஒப்படைக்கிறார். ஆனால் காவல்துறையினர் அவரை நம்பாமல்.. காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். கொலையாளி நகை பிரியர். அவர் அணிந்திருந்த நூற்றுக்கணக்கிலான சவரன் தங்க நகை எங்கே? என கேட்கிறார்கள். கொலை செய்தவர்களும் காவல்துறையிடம் சரணடைந்து நாங்கள் கொலை செய்த போது அவருடைய கழுத்தில் தங்க நகைகள் இருந்தது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இறுதியில் காணாமல் போன  தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி இந்த பிரச்சனையில் இருந்தது வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே  ’சத்திய சோதனை’ படத்தின்  கதை.
பிரதீப் என்ற அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  பிரேம் ஜி அந்த கதாபாத்திரமாகவே  வாழ்ந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு  ப்டத்ஹில் காட்சிகள் குறைவாக இருந்ததாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் காவல்துறை படும்பாடு சிரிப்பு  இயல்பான நடிப்பு கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது
நீதிபதியாக நடித்திருக்கும் ஞானசம்பந்தம் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் தவறே செய்யாதவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவலர்களை கண்டிக்கும் விதம்  அருமை.பிரேம் ஜி-யின் அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா, மாமாவாக நடித்திருக்கும் கர்ணராஜ், ஆகியோருக்கு கொடுத்த வேலையை சரியாக  செய்திருக்கிறார்கள்.
ரகுராம்.எம் இசையில் பாடல்கள்  கேட்கும் ரகம்,இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது

'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தின் மூலம் தனித்துவமிக்க படைப்பாளி என்ற அடையாளத்தை பதிவு செய்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் திரைப்படம் 'சத்திய சோதனை'.காவல்துறை ஒரு குற்றத்தை எப்படி கையாளுகிறது குற்றவாளிகளையும் நிரபராதிகளையும் எப்படி நடத்துகிறது ஒரு வழக்கை கையாள தெரியாத சில காவலர்களால் நீதித்துறை எப்படி திண்டாடுகிறது போன்ற அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Rank 4/5

Comments

Popular posts from this blog