’பீட்சா 3: தி மம்மி’ - விமர்சனம்
நாயகன் அஸ்வின்  சென்னையில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். ஆவிகள் இருப்பதை உணரும் செயலி ஒன்றை கண்டுபிடித்து  இருக்கும் நாயகி பவித்ரா மாரிமுத்துவும் நாயகன் அஸ்வினும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
பவித்ராவின்  அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். , காரணம் தன் தங்கையை பேஷன்  டிசைன் செய்யும் இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைபடுகிறார்.  தங்கையோ திருமணத்திற்கு  மறுப்பு தெரிவிக்க அண்ணனுக்கு காதலன் அஸ்வின் மேல் கோபம்  ஏற்படுகிறது.

இந்த நிலையில்  உணவகத்தில் அமானுஷ்ய உருவங்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறார்  நாயகன் அஸ்வின் இதையடுத்து   இன்ஸ்பெக்டர் கவுரவ் தன்  தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை மர்மமான  முறையில் இறக்கிறார் . அவரை  தொடர்ந்து தொழில் அதிபரும் இறக்கிறார். இறுதியில் இந்த தொடர் கொலைக்கான காரணம் என்ன? அந்த பேய்க்கும் அஸ்வினுக்கு உள்ள  தொடர்பு என்ன?  என்பதே ’பீட்சா 3: தி மம்மி’ படத்தின் கதை.
நாயகன் அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.  காதல், சோகம், கருணை என நடிப்பில் அனைத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார் . அறிமுக நாயகி பவித்ரா  பேய்கள் நடமாட்டத்தை ஆய்வு செய்ப்பவராக இயல்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ் நடிப்பில் மிரட்டுகிறார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  அனுபமா குமார் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.  இவருடைய மகளாக அபி நட்சத்திரா நடிப்பு பாராட்டுக்குரியது   கவிதா பாரதி, கொடூர குணம் கொண்டவராக நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அருண் ராஜ்  இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பிரபு ராகவ் ஒளிப்பதிவு   கதை ஒட்டகத்திற்கு ஏற்றவாறு  உள்ளது.
பள்ளி சிறுமிகளுக்கு எந்த விதத்தில் பாலியல் தொல்லைக்கு  ஆளாக்கப்படுகிறார்கள் . என்பதை சமூக சார்ந்த பிரச்சனையை  மையமாக வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர்  மோகன் கோவிந்த்  படத்தின் முதல் பாதியில்  திகில் அனுபவத்தோடு நகரும் கதை இரண்டாம் பாதியில்  கண்ணீர் வரவழைத்து விடுகிறது . பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய  திரைப்படம்.


Comments

Popular posts from this blog