’யானை முகத்தான்’ - விமர்சனம்

சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்  நாயகன்  ரமேஷ் திலக்  தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , பல பேரிடம் கடன் வாங்கி, அதை திரும் செலுத்த வேண்டும் என்ற எண்ண இல்லாமல்  கடன் கொடுத்தவர் விபத்தால் சாக வேண்டும் . அவர்களின் வீட்டில் கேட்ட செயல்கள் நடக்க வேண்டும் என விநாயகரிடம் வேண்டுகிறார்.

திடீர் என ஒரு நாள் ரமேஷ் திலக் விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருக்கும் போது இவருக்கு மட்டும் விநாயகர் காணாமல் போய் விடுகிறார் , ஆனால் மற்ற அனைவருக்கும் விநாயகர் தெரிகிறார், அது ஏன் நமக்கு மட்டும் கடவுள் தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ரமேஷ் திலக் முன்பு விநாயகர் தோன்றி , இனியாவது மற்றவர்களுக்கு நல்லது செய் அப்படி செய்தால் நான் உனக்கு தெரிவேன் என்று கூறுகிறார்,  இறுதியில் ரமேஷ் திலக் கண்களுக்கு விநாயகர் தெரிந்தாரா? இல்லையா? என்பதே  ’யானை முகத்தான்
முதன் முறையாக  கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்  இயல்பான  நடிப்பை கொடுத்திருக்கிறார். தீவிர விநாயகர் பக்த்தராக நடித்துடன் விநாயகரை தேடி அலையும் காட்சி, கிளைமாக்சில் வரும் காட்சி என முழுபடத்தையும் தன்  தோல் மீது தூக்கி சென்றிருக்கிறார்.
விநாயகராக வரும் யோகி பாபுவின் நடிப்பு அருமை  விநாயகராக விஸ்வரூபம் காட்டுவார் என்று பார்த்தல் அது ஏமாற்றமாகவே இருக்கிறது.  வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ஊர்வசி வழக்கம் போல இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். . ரமேஷ் திலக் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன் யதார்த்தமான நடிப்பு . வழக்கத்துக்கு மாறாக மிக நல்லவராக நடித்து இருக்கிறார் ஹரிஷ் பெராடி.

பரத் ஷங்கரின் இசை படத்தின் கதைக்கு ஏற்ப உள்ளது .கார்த்திக் எஸ் நாயர் கதை ஓட்டத்திற்கு  தேவையான ஒளிப்பதிவை செய்துள்ளார்.

விநாயகர் மூலம் சமூக கருத்தை சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

Comments

Popular posts from this blog