தமிழரசன்’ - விமர்சனம்
நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி  ரம்யா நம்பீசன். இவர்களுக்கு 10 வயது மகன்  மாஸ்டர் பிரணவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.. இவருடைய மேல் அதிகாரியுடன் ஏற்பட்ட  மோதலில் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்  விஜய் ஆண்டனி ... இந்நிலையில் அவருடைய  மகனுக்கு இதயத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட சிகிச்சைக்காக  தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார்..
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் மகன் பிழப்பான் என்று மருத்துவர்கள்  கூறுவதுடன் அதற்கு பல லட்சம் செலவாகும் என்கின்றனர். இந்நிலையில் அதே மருத்துவமனையில் இதய மாற்று சிகிச்சைக்காக அமைச்சர் ஒருவர் சேர்க்கப்படுகிறார்.

வரிசைப்படி சிறுவனுக்குத்தான் முதலில் இதய சிகிச்சை அளிக்க வேண்டும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் குளறுபடி செய்து அமைச்சர் பெயரை முதலில் சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கிறது.  இதனால் கோபம் கொண்ட விஜய்  ஆண்டனி எடுத்த முடிவு என்ன ? என்பதே ’தமிழரசன்’  படத்தின் ககதை.
காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடத்திருக்கும்  விஜய் ஆண்டனி, கதை முழுவதையும் தன் தோளில் சுமக்கிறார்.  அதிரடிக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் இல்லாத அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மகனை காப்பற்ற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று அவர் எடுக்கும் முடிவு அனைவரின்  கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

நாயகி ரம்யா நம்பீசன் மகனுக்காக  தவிக்கும் அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். ரம்யா நம்பீசன்.மகனுக்கு ஒரு பிரச்சனை  என்றதும் கலங்குமிடத்தில் நம்மையும் கலங்க வைக்கிறார். விஜய் ஆண்டனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் பிரணவ், நடிப்பில் கவர்கிறார்.
சுரேஷ் கோபி. ராதாரவி, சங்கீதா, சோனு சூட்  படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை குறை சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்  யோகிபாபு,ரோபோ சங்கர்
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,.பின்னணி இசை படத்தின் கதைக்கு ஏற்ப இருக்கிறது. ஆர்.டி/ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம்.

மருத்துவமனையில் நடக்கும் சில அட்டூழியங்களை எடுத்துக் காட்ட முயற்சித்திருக்கிறார்  இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.

Comments

Popular posts from this blog