சாகுந்தலம்’  -  விமர்சனம்
விஸ்வாமித்திரருக்கும், மேனகைக்கும் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. விஸ்வாமித்திரர் மேனகையை பிரிந்த தருணத்தில் மேனகை தன் குழந்தையை கன்வ முனிவரின் துறவு இல்லத்திற்கு அருகில் விட்டு சொர்க்க லோகம் செல்கிறார். அப்பொழுது சகுந்தல பறவைகளால் சூழப்பட்டிருந்த குழந்தையை கன்வ முனிவர் கண்டெடுத்தார் அதனால் அக்குழந்தைக்கு சகுந்தலை என்ற பெயர் வைத்து தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்க்கிறார்.

அந்த ஆசிரமத்தை தாண்டி வெளியுலகமே தெரியாத அவரை ஒரு நாள் அந்த பக்கமாக வேட்டைக்கு வந்த ராஜா துஷ்யந்தன் சந்திக்கிறார்.  சகுந்தலாவின் கொள்ளை அழகை பார்த்து மயங்கி விடும் துஷ்யந்த் (தேவ் மோகன்) சகுந்தலாவிடம் தனது காதலை சொல்ல,  இருவரும் கந்தர்வ திருமணம்  செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு விடுகின்றனர் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்பும் துஷ்யந்த்ன் மீண்டும் சகுந்தலாவை வந்து சந்திப்பேன், தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி தனது நாட்டிற்கு செல்கிறார்.

சகுந்தலை துஷ்யந்தனின் நினைவால் கவனம் இழந்து துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகிராள் காலம் கடந்து செல்ல செல்ல  தனது கணவனான துஷ்யந்தனை தேடி சகுந்தலைஅவருடைய நாட்டிற்கு சென்று தனது கணவனை சந்திக்கிறாள்  ஆனால் துர்வாசரின் சாபத்தினால் துஷ்யந்த் சகுந்தலையை மறக்கிறார்.  இறுதியில்   துஷ்யந்த் சகுந்தலை இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’சாகுந்தலம்’ படத்தின் கதை.

தாநாயகியாக சமந்தா சகுந்தலை கதா பாத்திரத்தில்  உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார். வலிமை மிக்க அரசன், போர்வீரன், என்றும் காதல் காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பை  தேவ் மோகன் வெளிப்படுத்தியுள்ளார். அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா சிறப்பாக நடித்து அனைவரையும்  கவர்கிறார்
இனிமையான ‘மல்லிகா மல்லிகா’ முதல் காதல் ‘மதுர் கல் து’ வரை படத்தின் செழுமையான மெலடிகள் மணி ஷர்மாவின் இசையில்  இனிமையாக உள்ளன.  படத்தில் வரும் விலங்குகளின் காட்சிகள், காடுகளின் காட்சிகள் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து கிராமத்தை காப்பாற்றும் காட்சியை ஒளிப்பதிவாளர் அழகாக காண்பித்து இருக்கிறார்.
இந்த காவியமான காதல் கதையை மீண்டும் சொல்லியதற்காக குணசேகரின் உன்னத முயற்சிகள் பாராட்டுக்கள்  பிரம்மாண்டத்திற்கு கொஞ்சம் கூட குறை என்றே சொல்ல முடியாத அளவில் காட்சியமைப்புகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் காட்சி அமைப்பிற்காகவே திரையரங்கில் சென்று பார்க்கலாம். 
நடிகர்கள் : சமந்தா, தேவ் மோகன், சச்சின் கெதகெர், மோகன் பாபு, அதிதி பாலன், அனான்யா நாகெல்லா, பிரகாஷ்ராஜ், கவுதமி

Comments

Popular posts from this blog