ருத்ரன்’ - விமர்சனம்
 
தனது  குடும்பத்தை தீர்த்துக் கட்டிய வில்லனையும் அவனது ஆட்களையும் கதாநாயகன் பழி வாங்கும் பழைய கதையே ’ருத்ரன்’
 
அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ்   எதிர்ச்சியாக ஹீரோயின் பிரியா பவானி ஷங்கரை பார்க்கிறார். ஹீரோயினை பார்த்தவுடன் காதலில் விழும் ராகவா லாரன்ஸ் தனது காதலை பிரியா பவானி ஷங்கரிடம் கூறுகிறார்.  ஒரு டிராவல்ஸ் நிறுவனம்  ஒன்றை நடத்தி வருகிறார்  நாசர்  இந்த நேரத்தில் நாசர் தனது நண்பருடன் இணைந்து புதிய பிஸ்னஸ் துவங்க ரூ. 6 கோடி கடனாக வாங்குகிறார்.

இந்த கடன் ரூ. 6 கோடியை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார் நாசரின் நண்பண்.  இதனால் அதிர்ச்சியடையும் நாசர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கடனை திருப்பி கொடுக்கவும் முடியாத நிலைமைக்கு செல்ல மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார்.. இதற்கிடையில் தன் காதலியான பிரியா பவானி சங்கரை திருமணம் செய்து கொள்கிறார் லாரண்ஸ். பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாடு செல்கிறார்
மறுபுறம்  சென்னையில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும்  சரத்குமார், தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் அனைத்து தொழிலையும் நடத்தி வருகிறார். தன்னை எதிர்க்கும் அனைவரையும் கொலை செய்கிறார், . கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கர் கணவரை பார்க்க வெளிநாட்டு  செல்கிறார். எதிர்பாராத நேரத்தில் அம்மாவின் மரணம் ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்பும்  பிரியாபவானிசங்கர். காணாமல் போகிறார் .  இறுதியில் நாயகன் ராகவா லாரன்ஸ் அம்மா  எப்படி உயிரிழந்தார்? மனைவி பிரியா பவானி சங்கர் எங்கே? சென்றார் எனபதை  கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே   ’ருத்ரன்’ படத்தினகதை.
நாயகன் ராகவா லாரன்ஸ் செம மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக நடனம், ஆக்ஷன்,செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும்  பட்டையை கிளப்பிவிட்டார். நாயகி பிரியா பவானி சங்கர அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ். சென்டிமென்ட் பகுதிக்கு கனகச்சிதமான தேர்வு. லாரன்ஸ் மற்றும் அவருக்கு இடையேயான காட்சிகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன.  நாசர் சில காட்சிகள் வந்தாலும் அனுபவ நடிப்பை காட்டியுள்ளார். வில்லன் சரத்குமார் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். நண்பனாக காளி வெங்கட் வழக்கம் போல் சிறந்த குணசித்திர நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் நிறைகிறார்

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம். சம்.சி.எஸ்  பின்னணி இசை கொஞ்சம்  சத்தம் அதிகமாக இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கதிரேசன் படத்தின் காட்சிகளை நன்றாகவே எதிர்கொண்டு இருக்கிறார்.  வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு அறிவுரை மற்றும்  எச்சரிக்கை செய்யும் கருத்தோடு வியாபாரத்திரைப்படங்களுக்குரிய எல்லா அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் 

Comments

Popular posts from this blog