தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் தலைவராகிறார் தேனாண்டாள் முரளி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் தலைவராகிறார் தேனாண்டாள் முரளி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் 30.4.2023 அன்று சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது.

வாக்களிக்க தகுதி உள்ள 1408 தயாரிப்பாளர்கள் அன்று வாக்களிக்க உள்ளார்கள்.

இதில் தற்போதய தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்களாக தமிழ்குமரனும், கல்பாத்தி அர்ச்சனாவும், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், கதிரேசன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச்செயலாளராக சௌந்தரபாண்டியனும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ் மணி, மாதேஷ், சித்ராலட்சுமணன், ஹெச்.முரளி, கபார், விஜயமுரளி, சுபாஷ் சந்திரபோஸ், பழனிவேல், உதயா, ஷக்தி சிதம்பரம், திருமலை, ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தயாரிப்பாளருமான அம்பேத்குமார், சுரேஷ், சாலை சகாதேவன், டில்லிபாபு, பன்னீர் செலவம், தாய் சரவணன், ரஞ்சித்குமார், ராமசந்திரன், செல்வராஜ், ஜெயசீலன். ஜோதி, அன்பு, செந்தில்குமார், செந்தாமரைகண்ணன் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
உரிமை காக்கும் அணி சார்பில் மன்னன் தலைமையில் விடியல் ராஜ் துணைத்தலைவர் பதவிக்கும். கமீலா நாசர் , தேனப்பன் செயலாளர்கள் பதவிக்கும், ரவீந்தர் சந்திரசேகரன் பொருளாளர் பதவிக்கும், மணிகண்டன் இணை செயலளர் பதவிக்கும், தேவயாணி, முருகன், செல்வகுமார் உட்பட 26 செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

ஓயாத அலைகள் சார்பில் இணை செயலாளர் பதவிக்கு ஜெமினி ராகவா உட்பட பத்துக்கும் மேற்பட்ட செயற்குழு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் கலைப்புலி சேகரன், ராஜேஷ்வரி வேந்தன் இருவரும் துணைத்தலைவர் பதவிக்கும், இன்னொரு கதிரேசன் செயலாளர் பதவிக்கும், சிங்காரவடிவேன் பொருளாளர் பதவிக்கும், டேவிட்ராஜ், இசக்கிராஜா இருவரும் இணை செயலாளர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

போட்டியில் உள்ள வேட்பாளர்கள் குறித்து வாக்களிக்க உரிமையுள்ள தயாரிப்பாளர்களிடம் நமது டீம் ஒரு சர்வே நடத்தியது.

அதில் 796 தயாரிப்பாளாகள் என்.இராமசாமி தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்கப்போவதாக தெரிவித்தனர். 257 தயாரிப்பாளர்கள் இந்த அணிக்கு எதிராக வாக்களிப்போம் என தெரிவித்தனர்.146 தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
மற்றவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆதரவு தெரிவித்த தயாரிப்பாளர்களிடம் ஏன் முரளி அவர்களின் அணிக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று நாம் எழுப்பிய கேள்விக்கு" இந்த தயாரிப்பு தொழிலுக்கு  அரசாங்கத்தின் ஆதரவு மிக முக்கியம். அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு வலுவான, வளமான எதிர்காலம் தேவை. இந்த அணியில் போட்டியிடும் நிர்வாகிகளிடம் அந்த தகுதி இருக்கிறது.
அதிலும் முரளி அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களுக்கு மானியத்தொகையை வழங்க போவதாக அறிவித்ததுள்ளார்கள். அது மட்டுமில்லாமல் இவரால்தான் பையனூரில் எங்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்து உள்ளது.
அதனால் இந்த அணியை தேர்வு செய்ய இருப்பதாக" கூறினார்கள்.

எனவே இரண்டாவது முறையாக என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி மீண்டும் தலைவராக பதவி ஏற்பது உறுதியாகிறது. அவரது அணியினருக்கும் பெருவாரியான வாக்குகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

Comments

Popular posts from this blog