விடுதலை - பாகம் 1’  -  விமர்சனம்

அருமபுரி என்ற மலை கிராமத்தில் சுரங்கம் அமைப்பதற்காக அரசு திட்டமிடுகிறது. அரசு சுரங்கம் அமைத்தால் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகும் என்பதால் விஜய் சேதுபதி தலைமையில் இயங்கும் தமிழர் மக்கள் படை சுரங்கம் தோண்டுவற்கு  எதிர்த்து  ரயிலுக்கு  வெடி குண்டு வைத்துத் தகர்க்கிறது. இவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி கெளதம் மேனன் நியமிக்கப்படுகிறார்.
அடர்ந்த வனப்பகுதியில் சோதனை சாவடிகளை அமைத்து, மக்கள் படையின் நடமாட்டத்தை குறைத்து, அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தனிப்படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்  மலை பகுதியில்  பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஜீப் மூலம் சாப்பாடு கொண்டு செல்லும் வேலையை பார்க்கும் நாயகன் சூரி.  மனிதாபிமானம் மிக்கவராக இருப்பதால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகி துறை ரீதியாக சூரி தண்டிக்கப்படுகிறார்  
அதே  கிராமத்தில் வசிக்கும் பவானி ஸ்ரீயுடன் காதல் ஏற்படுகிறது. போலீஸார் கண்களில் சிக்காமல் இருக்கும் விஜய் சேதுபதி பதுங்கி இருக்கும் இடத்தை ஒரு முறை சூரி பார்த்துவிடுகிறார்.  இதனை தனது மேல் அதிகாரியிடம் சூரி சொல்கிறார். இறுதியில் சூரி மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதியை கைது செய்தாரா?  இல்லையா?  எனபதே  ’விடுதலை - பாகம் 1’ படத்தின் கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் சூரி, குமரேசன் என்ற போலீஸ்  வேடத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் நடிகர் சூரி என்பது தெரியாதவாறு குமரேசநாகவே வாழ்ந்திருக்கிறார். சண்டை காட்சியில் அசலாகவே அடி வாங்கி நடித்திருக்கும் இவரது அர்ப்பணிப்பு… ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலை திரைப்படம் சூரிக்கு திருப்புமுனை படமாக இருக்கும்.
மக்கள் படை தலைவனாக வாத்தியார் என்ற பெருமாள் கதாபாத்திரத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி… வித்யாசமான தோற்றம் மற்றும் உடல் மொழியில் நடித்து ரசிகர்களை கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ பழங்குடி இன பெண் வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு தனது அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்.
போலீஸ் அதிகாரிகளாக வரும் கௌதம் மேனன், சேத்தன், ஆகியோர் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். இதில் குறிப்பாக சேத்தன், ஈவிரக்கம் இல்லாத ஒரு கடுமையான சுபாவம் கொண்ட போலீஸாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

இளையராஜா இசையில் “காட்டு மல்லி...” பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது.   பின்னணி இசை மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்,  மலைகிராமத்திற்குள் பயணிக்க வைக்கும் வையில் காட்சிகளை இயல்பாக படமாக்கியுள்ளார்.

படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை நமது கவனம் சிதறாத வகையில் திரைக்கதையை நகர்த்தி செல்லும் இயக்குநர் வெற்றிமாறன், கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெறும் லொக்கேஷன் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் மூலம் நம்மை வியக்க வைத்திருக்கிறார். முதல் பாகத்தின் முடிவு ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


Comments

Popular posts from this blog