’அகிலன்’ -  விமர்சனம்

சென்னை  துறைமுகத்தையும், அதில் பணியாற்றும் அதிகாரிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சட்டவிரோதமான வேலைகளை செய்து வருகிறார்.  ஹரிஷ் பெராடி. இவருக்கு அடியாளாக வேலை பார்க்கிறார் ஜெயம் ரவி ஹரிஷ் பெராடிக்காக கொலை கூட செய்பவர்  இந்த கடத்தலுக்கு  தலைவனாக இருக்கும் கபூரை அகிலன் சந்திக்கிறார்.  அப்போது கபூர் வேலை ஒன்று சொல்கிறார். இந்த வேலையை செய்து முடிப்பவன் தான் இனிமே கிங் ஆஃப் இந்திய பெருங்கடல் என அறிவிக்கிறார் கபூர்.

இதற்கிடையே, ஹரீஷ் பெராடியை ஓரம் கட்டிவிட்டு, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடும் ஜெயம் ரவிக்கும், ஹரிஷ் பெராடிக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால், ஜெயம் ரவியை கொலை செய்ய முடிவு செய்யும் ஹரிஷ் பெராடி, அதற்காக அவரை பின் தொடரும் போது ஜெயம் ரவி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. இறுதியில் ஜெயம் ரவியின் உண்மையான நோக்கம் என்ன? அது நிறைவேறியதா இல்லையா ? என்பதே ’அகிலன்’  படத்தின் மகதை.
எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஜெயம் ரவி, அகிலன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான  நடிப்பை  கொடுத்திருக்கிறார்.  அடுத்தவர்களை உசுப்பேற்றி காரியம் சாதிப்பது, வசன உச்சரிப்பு, கோபம், அழுகை என படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பிரியாபவானிசங்கருக்குக் காவல்துறை அதிகாரி வேடம். அதைப் பார்த்துப் பயமோ பதட்டமோ இல்லாமல் அவரை  ரசிக்கலாம் என்கிற அளவுக்கு அவருடைய வேடம் இருக்கிறது.  மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் வேடம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, சிராக் ஜானி, மதுசூதனன் என மற்ற அனைவரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது
சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் கேட்கும் விதத்தில் உள்ளது . பின்னணி இசை படத்தின் கதையோடு பயணிக்கிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது  ஹார்பர் களமும் கடலும் திரையில் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் தற்போதைய சமுதாயத்திற்கு தேவையான கருத்தை முன் வைத்துள்ளார்.    முதல் பாதி தீவிரமாக நகர்ந்து கதைக்கான சுவாரஸ்யத்தைக் கூட்டினாலும், இரண்டாம் பாதி  திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருந்தால் படம் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும். உலக அரசியல் , மக்களின் பசி குறித்து இயக்குனர் கூறியுள்ளார் கருத்து அருமை.


Comments

Popular posts from this blog