‘கப்ஜா’ விமர்சனம்
சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் மகன்  உபேந்திரா  தன் தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வருகிறான். தந்தை இறப்புக்கு பிறகு இவர்கள் மூவரும் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு வந்து வாழ்கிறார்கள். விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் உபேந்திரா  சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரியா சரணை காதலித்து வருகிறார்.   ராஜ பாரம்பரிய கலாச்சாரத்தை மீறி  நாயகி ஸ்ரேயாவை திருமணம் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் தனது அண்ணனின் கொடூரமான கொலைக்கு பழி தீர்க்க களத்தில் இறங்குகிறார். ஆனால், காலம் look அவரை இந்தியாவே பார்த்து மிரளும் நிலழ் உலக தாதாவாக மாற்றிவிடுகிறது. கதாநாயகி  ஸ்ரேயாவின் தந்தை முரளி அரசாங்க அளவில் தனது செல்வாக்கை உபயோகப்படுத்தி உபேந்திரா கொலை செய்ய முயற்சியில் ஈடுபடுகிறார். இறுதியில்  யார் ? வென்றார்கள் என்பதே ‘கப்ஜா’ படத்தின் கதை.
ஆர்க்கேஷ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்னட நடிகர் உபேந்திரா  மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் படம் முழுக்க உபேந்திரா மீது தான் நகர்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்திருக்கும் படம்  இவரது அற்புதமான  நடனத்தின்  மூலம்  அனைவரையும் கவர்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கதைக்கு  ஏற்றபடி இருப்பதோடு, மிரட்டலாகவும்  நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் வரும் காட்சிகள் மனதில் நிற்கிறது
கே.ஜி.எஃப்’ படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். பாடல்கள்,  மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு காட்சிகளுக்கு விருந்தாக இருக்கிறது.  ஒளிப்பதிவாளர் ஏ.ஜே.ஷெட்டி காட்சிகளை பிரமாண்டமாக கட்ட மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.சந்துரு ஒரு  பிரமாண்டம், ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog