கண்ணை நம்பாதே’ - விமர்சனம்

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் உதயநிதி) தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்காரரின்  மகள் ஆத்மிகாவை  காதலிக்கிறார்.  இந்த விஷயம் தமிகாவின் தந்தைக்கு தெரிய வர உதயநிதியை வீட்டை விட்டு  வெளியேற்றுகிறார்.  உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார்.வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ் இவர்களுடன் இணைகிறார்.
மூவரும் பாருக்கு சென்ற நேரத்தில் கார் ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பூமிகாவை வீட்டில் கொண்டு விட்டு உதவி செய்கிறார் உதயநிதி. உதவி செய்ததற்கு கைமாறாக அவர் தனது காரை கொடுத்து, காலையில் கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார். அவர் சொன்னபடியே காரை கொண்டு செல்லும் உதயநிதி காலையில் காரை எடுக்கச் செல்லும் போது காரின் டிக்கியில் பூமிகா பிணமாக கிடக்கிறார்.  இறுதியில் நாயகன் கவலை குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ’கண்ணை நம்பாதே’   படத்தின் கதை.

கதை நாயகனாக  இயல்பான நடிட்ப்பை கொடுத்திருக்கும் உதயநிதி, தான் செய்யாத குற்றத்திற்கு போராடும் இளைஞனாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் உதயநிதி பாராட்டை பெறுகிறார்.
நாயகி நடித்திருக்கும் ஆத்மிகாவிற்கு  காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார்.  
படத்தின் வில்லனாக ஸ்ரீகாந்த். உதயநிதியின் நண்பனாக சதீஷ் ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அதன்பின் படத்தில் காணாமல் போய்விடுகிறார். பூமிகாவின் கதாபாத்திரமும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். சுபிக்ஷா, வசுந்தரா, மாரிமுத்து, சென்ராயன் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர்.

சித்து குமார் இசையில் அனைத்து பாடல்கள்  கேட்கும் ரகம்,  பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பெரும்பாலும் இரவில் நடக்கும் காட்சிகள். அவற்றைச் சரியான ஒளியமைப்பில் காட்சிப்படுத்தி இரசிக்கவைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜலந்தர்வாசன்.

படத்தின் பெரும்பலம் சஸ்பென்ஸ். ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு திரில்லிங்காக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குநர் மாறன். படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது. கடைசி வரை கொலைகாரர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் பரபரப்பை ஏற்படுத்தும்  கதைதான் கண்ணை நம்பாதே.


Comments

Popular posts from this blog