குடிமகான்’ - விமர்சனம்


வங்கி ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் விஜய் சிவன், அப்பா மனைவி மகன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத இவர் வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் கிடைக்கும் தின்பண்டங்கள் அனைத்தையும் அடிக்கடி சாப்பிடுகிறார், அப்படி இவர் அளவுக்கு மீறி தின்பண்டங்கள் தின்றதால் குடிக்காமலேயே போதை ஆகும் ஒரு வகை நோய் வந்துவிடுகிறது.

இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பும்போது.. மயக்க நிலை ஏற்பட.. 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாயை மாற்றி நிரப்புகிறார். இந்த ஏடிஎம்மை பயன்படுத்தும் பயனாளிகள்.., 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வருவதை கண்டு, மகிழ்ச்சி அடைந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் வங்கிக்கும், இந்த பணியை மேற்கொண்டிருக்கும் தனியார் நிறுவனத்திற்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் நாயகனுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. இறுதியில் நாயகன் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் வாங்கினாரா? இல்லையா? பறிபோன வேலை கிடத்ததா? என்பதே ’குடிமகான்’  
 படத்தின் கதை..

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன், அப்பாவியான குடும்ப தலைவனாகவும், மாத சம்பளத்தை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். மது அருந்தாமல் போதையில் தள்ளாடும் கதாநாயகனின் கதாபாத்திரம் சிறப்பு. அதற்கு நடிகர் விஜய் சிவன் பொருத்தமாக இருக்கிறார். முதல் படம் போல் இல்லாமல் சோகம், மகிழ்ச்சி என அனைத்து பாவங்களையும் மிக இயல்பாக செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார். நாயகன் தந்தையாக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவத்தியின் அலப்பறையும் நன்றாக இருக்கிறது.
குடிகார சங்கத்தின் தலைவராக வரும் நமோ நாராயணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்தின் இயல்பை உணர்ந்து நடித்து சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி சிறப்பாக செய்திருக்கிறார். காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறார். தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் வைகையில் உள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும், காமெடி காட்சிகளுக்கு ஏற்றபடியும் சிறப்பாக இருக்கிறது.

படத்தின் முதல்பாதி குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர் என்.பிரகாஷ் இரண்டாம் பாதி படம் பார்ப்பவர்கள் அனைவரும் ரசித்து சிரித்து மகிழும்படி கொடுத்துள்ளார். பொது மக்கள் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் போது.., அதற்கான நோக்கத்தை பொதுநலத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதனை சமுருக அக்கறையோடு சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.. குடுப்பத்தோடு அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு காமெடி படம்.

நடிகர்கள் : விஜய் சிவன், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேதுராமன், நமோ நாராயணன், கதிரவன், ஹானஸ்ட் ராஜ்

இசை: தனுஜ் மேனன்

இயக்கம்: பிரகாஷ் என்.

பி ஆர் ஓ: ஏ.ஜான்

Comments

Popular posts from this blog