மெமரீஸ்’  - விமர்சனம்

ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் நாயகன் வெற்றி அவரின் சட்டையெல்லாம் ரத்தக்கறையாக இருக்கின்றது, தான் யார் என்பதே அவருக்கு சுத்தாமாக நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் வெற்றியை  காரில் ஏற்றி சென்றுகொண்டிருக்கும் போது அங்கு ஒரு செய்தி தாளை பார்க்கிறார் அதில் 4 கொலைகளை செய்த குற்றவாளியை போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக அதில் இருக்கிறது மற்றும் அதில் வெற்றியின் புகைபடமும் இருக்கிறது. அதனை கண்டு வெற்றி அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது வெற்றியை காரில் கூட்டி வந்த அந்த நபர் , வெற்றியை காரிலிருந்து இறக்கிவிட்டு வெற்றியிடம் உனக்கு 17 மணி நேரம் தான் இருக்கிறது அதற்குள் உன்னுடைய பழைய நினைவுகளை நினைவு படுத்துமாறு சொல்கிறார்,  அந்த 17 மணி நேரத்தில் வெற்றி தனது பழைய நினைவுகளை நினைவுபடுத்தி  தான் யார் என்பதை தெரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதே ’மெமரீஸ்’  படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் வெற்றி வித்தியாசமான நடிப்பை கொடுத்து  அசத்தி இருக்கிறார்.  அப்பாவியாக, குரூரக் குணம் கொண்டவராக, போலீஸ் அதிகாரியாக, மருத்துவராக இப்படி பல தோற்றங்களிலும் தனது நடிப்பை  சரியாக  செய்துத்திருக்கிறார்.  

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி அருண் கதையில் ஒரு கதாபாத்திரமாக வந்தாலும் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் டயானாவும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.  அதே நேரம் இப்படத்தில் நடித்துள்ள ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர் என் ஆர் மனோகர், போன்ற பிற நட்சத்திரங்களும் தங்களுக்குக் கொடுத்த  வாய்ப்பை சரியாகச் செய்துள்ளார்கள்
கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப உள்ளது. ஒளிப்பதிவாளர்கள் அர்மோ மற்றும் கிரண் நிபிடல் வெற்றியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடியிருக்கிறார்கள். காடு, மலை என அலைத்திருக்கும் கேமரா கதையோடு  பயணிக்கும் வகையில் உள்ளது

ஷியாம் – ப்ரவீன் இரட்டை இயக்குநர்கள் எளிமையான கதையை குழபங்கள் நிறைந்த திரைக்கதையாக்கி, அதை தெளிவாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.முதல் பாதியில் இருந்த வேகமும் அடுத்த பாதியில் இல்லை என்று கூறலாம். எனினும் புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.


Comments

Popular posts from this blog