ஷூட் தி குருவி - விமர்சனம்
 
ஈரோட்டில் வசிக்கும் ஆஷிக் ஹுசைனுக்கு  ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு 5 லட்சம் தேவைப்படுகிறது. சாமியாராக இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி இவரது கனவில் தோன்றி 5 வித  இலக்குகளை நிறைவேற்றி கொள்ளுமாறு கட்டளை இடுகிறார். இதையடுத்து சென்னை வருகிறார்.ஆஷிக்
சென்னையில் பிரபல கேங்ஸ்டர்  குருவி ராஜனை  என்கவுண்டர்  செய்ய வரும் போலீஸ் உயர் அதிகாரியை  கொலை செய்கிறான்  குருவி ராஜன் யார் என்று தெரியாமல் குருவி ராஜன்  தலையில் தாக்கி விடுகிறான் ஆஷிக்  குருவி ராஜனிடம் அடியாளாகாக வேலை பார்க்கும்  சாய் பிரசன்னா ஆஷிக்கை காப்பாற்றுவதற்காக  ஷா ராவின் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைக்கிறார். இறுதியில் தன்னை தாக்கிய ஆஷிக்கை  குருவி ராஜன் என்ன ? செய்தான்  என்பதே  ஷூட் தி குருவி படத்தின் கதை.

கேங்ஸ்டர்  குருவி ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய்  உண்மையான கேங்ஸ்டர் போல வளம் வருகிறார்.அமைச்சர்,போலீஸ் உயர் அதிகாரி என அனைவருக்கும் நேரம் கொடுத்து  கொலை செய்வது என இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஷா ரா - ஆஷிக்  நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. ஆஷிக் 5 இலக்குகளை அடைய அவர் செய்யும்  ஒவொரு செயலும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.  கதையில்  யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை  ஏற்படுத்துகிறார்  ஷா ரா சாமியாராக வரும்  சுரேஷ் சக்ரவர்த்தி, சாய் பிரசன்னா இதில் நடித்த அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
மூன்ராக்ஸ் பின்னணி  இசை ஒரு திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.   பிரண்டன் சுஷாந்த்
ஒளிப்பதிவில் காட்சிகள் கதையோடு பயணிக்கும் வகையில் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

திரைக்கதை, எழுதி  இயக்கியிருக்கும் இயக்குனர்  மதிவாணன்  சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்.  அடுத்து என்ன நடக்கும் என்று யாரும் யூகிக்க  முடியாத அளவுக்கு கதையை எடுத்திருக்கிறார்.    ஒரு சிறப்பான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : அஜய் , ஷா ரா , ஆஷிக் ஹுசைன்,சுரேஷ் சக்ரவர்த்தி,சாய் பிரசன்னா

இசை : மூன்ராக்ஸ்

இயக்கம் : மதிவாணன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog