கொன்றால் பாவம்’  -  விமர்சனம்

சில நிமிட சஞ்சலம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி  புரட்டிப்போட்டு விடும் என்பதற்கு உதாரணமாக வெளியாகி உள்ள படம்தான் இந்த கொன்றால் பாவம்

1980 காலகட்டத்தில் நடக்கும் கதை இது. வரலட்சுமி, அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரி ராவ் என கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தங்களது நிலத்தில், ஒரு சாதாரண வீட்டில் அன்றாட செலவுக்கே சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். கடன் வாங்குகிறார்கள். கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்க, கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறது சார்லியின் குடும்பம்.

இந்த சூழ்நிலையில் வழிப்போக்கனான சந்தோஷ் பிரதாப் அந்த வீட்டிற்கு வந்து இன்று இரவு தங்கிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்க,சார்லின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். அப்போது அவரிடம் நிறைய பணமும் நகைகளும் இருப்பதை பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் வரலட்சுமி, அந்த பணம் முழுவதையும் தங்களுக்கே சொந்தமாக்கி கொண்டால் மொத்த பிரச்சனைக்கும் விடிவு கிடைக்கும் என குறுக்கு புத்தியுடன் ஒரு முடிவு எடுக்கிறார். இறுதியில் வரலட்சுமி, எடுத்த விபரீதமான முடிவு என்ன ? என்பதே படத்தின் கதை.

மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், வறுமையான வாழ்க்கையை வெறுத்து வாழ்வதை தனது வெறுப்பான பேச்சால் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தங்களுக்கு விடிவு காலம் பிறந்து விடாதா..! என ஏக்கத்துடன் வாழ்கிறார்  வரலட்சுமி சரத்குமார்.  நடிப்பின் சிகரமாய் உயர்ந்து கொண்டே இருக்கிறார்
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் - நல்ல உடற்கட்டும், கதாபாத்திரத்திற்கேற்ற உடல் மொழியுடனும் திரையில் தோன்றி, நாயக பிம்பத்திற்கான நம்பகத்தன்மையை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தி வெற்றி பெறுகிறார் சந்தோஷ்  

அப்பாவாக நடித்திருக்கும் சார்லி யதார்த்தமான நடிப்பில் அசத்தி இருக்கிறார். ஈஸ்வரி ராவ்,நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறார்.  சுப்ரமணிய சிவா,  பார்வையாற்றவராக நடித்திருக்கும்  சென்ராயன்  ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.ஒளிப்பதிவாளர் செழியன் 1980 களில் நடக்கும் கதைக்கு ஏற்ப காட்சிகளை மிக தத்ருபமாக படமாக்கியிருக்கிறார்.   மின்சார விளக்குகளை பயன்படுத்தாமல் இயல்பாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்
இயக்குனர் தயாள் பத்மநாபன் கிரைம், திரில்லர் கதையை போரடிக்காமல் இயக்கியிருப்பது சிறப்பு.  ” கதையை, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக கொடுத்தாலும், வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை மிக அழுத்தமாக இயக்குநர் தயாள் பத்மநாபன் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் எதிர்பாராத மற்றும் யூகிக்க இயலாத காட்சிகள் இடம்பெற்றிருப்பது மட்டுமே இப்படத்தின் பலம்.


Comments

Popular posts from this blog