மெய்ப்பட செய்’ விமர்சனம்
தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ஆதவ் பாலாஜி பக்கத்து ஊரில் இருக்கும் பெரிய மனிதர்  ராஜ்கபூர் இவருடைய மகள் நாயகி மதுனிகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது.இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு துணையாக நாயகனின் 3  நண்பர்களும் செல்கிறார்கள்.

சென்னையில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து தங்குகிறார்கள்..அந்த வீட்டில் பிணம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட அது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண் என்று தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார் நாயகன். இறுதியில் நாயகன் கொலை குற்றவாளிகளுக்கு  தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே ‘மெய்ப்பட செய்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி,முதல் படம் போல் இல்லாமல் காதல்,, ஆக்ஷன் , செண்டிமெண்ட், என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆதவ் பாலாஜி நாயகி மதுனிகா பார்ப்பதற்கு  அழகாவும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவும் செய்திருக்கிறார் .

நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும்  பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடி வில்லனாக மிரட்டி  இறுதியில் நல்லவனாக மாறுவது என இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் இவருக்கு  நிச்சயம்  தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார்

சென்னையில் பெரிய தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால், உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறது. இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், மதுனிகாவின் தந்தையாக ராஜ்கபூர், ஆதவ் பாலாஜியின் தந்தையாக சூப்பர்குட் சுப்பிரமணி உணர்ச்சிபூர்வமாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பரணியின்  இசையில் பாடல் கேட்பதற்கு  இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும்  சண்டைக்காட்சிகளும்  கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார். மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சியில்  சண்டைக்காட்சிகள் நியாயமாக இருக்கின்றன.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இவருடைய முயற்சியை நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

Comments

Popular posts from this blog