"மாளிகப்புரம்"  - விமர்சனம்
கேரளாவில் உள்ள ஒரு சிறிய ஊரில் அப்பா, அம்மா, பாட்டி என உறவினர்கள் சூழ மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்.சிறுமி தேவநந்தா அவரது பாட்டி சொன்ன சுவாமி ஐயப்பன் கதைகளை கேட்டு வளரும் தேவநந்தா சபரிமலை சென்று  ஐயப்பனை தரிசிக்க ஆர்வமாக இருக்கிறார். சிறுமியின் அப்பா சபரிமலை அழைத்து செல்வதாக சொல்லி மலைக்கு போவதற்காக மாலை போட்டு விடுகிறார்.

இந்நிலையில் தேவநந்தாவின்  அப்பா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்.  தன்னை சபரி மலைக்கு  கூட்டிச்செல்ல யாரும் இல்லாததால் சிறுமி தேவநந்தா பள்ளி தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார்  இந்த சூழ்நிலையில்தான் சிறுமிகளை கடத்தி செல்லும் சம்பத் ராம் சிறுமி தேவநந்தாவின் மேல் கண் வைக்கிறான். இந்நிலையில் திடீரென வரும் உன்னி முகுந்தன் தேவானந்தாவை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா சிறுமி ஐயப்பனை தரிசனம் செய்தாரா? இல்லையா? என்பதே  "மாளிகப்புரம்" படத்தின்கதை.

.நாயகன் உன்னி முகுந்தன் கறுப்பு உடை,திடகாத்திர தேகம், அழகான சிரிப்புடன் வலம் வருகிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டும் வேகம் வியப்புக்குரியது. தொடக்கத்தில் ஒரு சாதாரண பக்தர் போல் வந்து சாகசம் செய்கிறார். இறுதியில் அவர் யார்? எனத் தெரியும்போது எல்லாம் பொருத்தமாக அமைந்துவிடுகிறது
சிறுமி தேவநந்தா அந்த வேடத்துக்கு முழுநியாயம் செய்துள்ளார்.வெள்ளந்திச் சிரிப்புடன் இருக்கும் அவருக்கு ஏற்படும் அளவுக்கு மீறிய சோகத்தையும் முகத்தில் காட்டிக்  அனைவரின்  கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவன் ஸ்ரீபத் துறுதுறுப்புடன் நடித்து கவனம் ஈர்க்கிறார்
வில்லனாக வரும் சம்பத் ராமை மலையாள சினிமா நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளது. நாம் வெறுக்கும் அளவுக்கு வில்லத் தனமான நடிப்பை தந்துள்ளார் சம்பத். காவல்துறை அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயன், கொஞ்ச நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சைஜு குருப் அந்த வழக்கமான அப்பா கதாபாத்திரத்தின் மூலம் கண் கலங்க வைத்து விடுகிறார்.
இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜா கதைக்கு தேவையான இசையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவு சபரிமலை பயணத்திற்கு செல்லும் உணர்வை தருகிறது.

ஒரு கடவுள் பக்தி படத்தை இப்படியும் எடுக்கலாம் என்று வெற்றிகரமான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்னு சசி சங்கர். ஐயப்ப பக்த்தராக இல்லாமல் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய தரமான படம்  "மாளிகப்புரம்"

.

Comments

Popular posts from this blog