பதான் - விமர்சனம்
இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவின் முன்னாள் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகானிடம்  பொறுப்பை  ஒப்படைக்கிறார்.  இந்தியாவின் ரா உளவு பிரிவு அதிகாரியான டிம்பிள் கபாடியா அதை தடுக்க மற்றோரு உளவாளியாக இருக்கும் நேர்மையான உளவாளி ஷாருக்கானை அனுப்புகிறார்.
வில்லன் ஜான் ஆபிரகானை  பிடிக்க நெருங்கும் நேரத்தில் அவரை தனது காதல் வலையில் வீழ்த்துகிறார் நாயகி தீபிகா படுகோன்  இதனால் ஷாருக்கான் தடுமாறி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இறுதியில் நாயகன் வில்லன் சதி திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா? என்பதே ‘பதான்’ படத்தின் கதை.
பதான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாருக்கான் அதிரடி நாயகனாக கலக்கி இருக்கிறார். .ரொமான்டிக் ஹீரோவாக ஜொலித்த ஷாருக், இம்முறை ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.  ஷாருக் கானின் நடிப்பு பிரமாதம். படத்தை அவர் தான் தூக்கி பிடிக்கிறார். நாயகி தீபிகா படுகோன் கவர்ச்சியில் மட்டுமல்ல.. சண்டைக் காட்சியிலும் தூள் பறத்துகிறார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் சல்மான் கான்  
வில்லனாக நடித்திருக்கும்  ஜான் ஆபிரகாம், உண்மையிலேயே கொடூர வில்லனோ என நினைக்கும் அளவுக்கு மிரட்டி இருக்கிறார். ரா உளவு பிரிவு  உயர் அதிகாரியாக நடித்திருக்கும்  டிம்பிள் கபாடியா  தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். இறுதி காட்சியில் இவரது நடிப்பு அனைவரின் கண்களிலும் நீர் வர வைக்கிறது.

சண்டைக் காட்சி மட்டுமின்றி அதை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் சச்சித் பவுலோஸ் பாராட்ட வேண்டும். பின்னணி இசை  படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த், ஆக்ஷன் படங்களுக்கு பெயர் பெற்றவர். பதான் படத்திலும் அது தொடர்ந்திருக்கிறார். ஹெலிகாப்டர் சண்டை, பைக்கால் ஏரியில் பைக் சேஸ், ரயில் சண்டை, ஜெட் ஃபைட் என ஆக்ஷனுக்கு புது ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார் சித்தார்த் ஆனந்த்.   ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தை கொடுக்கிறது  
8

Comments

Popular posts from this blog