அயலி’ வெப் சீரிஸ்  - விமர்சனம்

சாதி, சமயம், தெய்வம் ,நம்பிக்கைகள் ,பழக்க வழக்கங்கள், சம்பிரதாயம் என்கிற பெயரால் பெண்களுக்கு எவ்வாறு கல்வி மறுக்கப்படுகிறது என்பதைச் சொல்கிற கதைதான்   ‘அயலி’

1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள  வீரப்பண்ணை கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வம் இருக்கிறது.  அந்த கிராமத்தில் பெண்கள் பருவம் எய்தியவுடன் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பது அங்குள்ள வழக்கம்.அதை மீறினால் அது தெய்வ குற்றமாகக் கருதப்படும்.இதனால் அங்கு படிக்கும் பெண்கள் ஒன்பதாம் வகுப்பு தாண்டுவதில்லை 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ, நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

 ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் அபிநயஸ்ரீ தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார்,  இதற்கிடையில் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதனை தனது அம்மாவின் உதவியுடன் சமாளிக்கிறார். இறுதியில் அபிநயஸ்ரீ பிடித்து டாக்டர் ஆனாரா  ? இல்லையா ? என்பதே  ‘அயலி’ வெப் சீரிஸின் மீதி1990க்கதை..
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.இவரது கண்கள் அசைவின் மூலமே நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். தமிழ்செல்வியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், காலம்காலமாக கனவுகளை மறைத்து கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தால் போதும் என்று வாழ்ந்து வரும் பெண்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
.தமிழ்செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன், பாசக்காரத் தந்தை. ஆனாலும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவராக வருகிறார்.அவரது நடிப்பு நேர்த்தியாக உள்ளது. வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, குறை இல்லாத நடிப்பு.சிங்கம்புலி, ஆசிரியராக வரும் டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி ஆகியோர் வரும் காட்சிகள்  சிரிக்கவும் சிந்த்திக்கவும் வைக்கிறது.
காயத்ரி, லவ்லின், தாரா, பிரகதீஷ்வரன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கிராமத்து மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.  வீரபண்ணை கிராமத்தை  இயல்பாக படமாகியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி,   ரேவாவின் இசையில் பாடல்கள் மனதில் இடம்பிடிக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு  பயணிக்கிறது.

ஒரு நல்ல சமூகக் கருத்த இயக்குநர் முத்துக்குமாரைப் பாராட்டலாம் .
)

Comments

Popular posts from this blog