ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.  இதனால் அவரது அம்மாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே இருக்கிறார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக டாக்ஸி ஓட்டுநர் வேலையை செய்கிறார்  ஐஸ்வர்யா  ராஜேஷ்
பிரபல அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய  3 பேர் கொண்ட  கூலிப்படை. காரில் செல்லும் போது வழியில் விபத்துக்குள்ளாகிறது. இதனால் ஓலா வாகனத்தில் செல்ல முடிவெடுக்கின்றனர் மூவரும். அது ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனமாக இருக்கிறது. கூலிப்படையினர் மூவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனத்தில் ஏறிக் கொள்கின்றனர்.
கூலிப்படை என்று தெரியாமல் அவர்களுக்கு கால் டாக்ஸி ஓட்டுகிறார் ஐஸ்வர்யா. ஒரு கட்டத்தில் கூலிப்படை பற்றி  ஐஸ்வர்யாவிற்கு தெரிய வருகிறது. .இறுதியில்  ஐஸ்வர்யா கொலைகாரகர்களிடம் இருந்தது தப்பித்தாரா? இல்லையா?  ‘என்பதே டிரைவர் ஜமுனா’ படத்தின் மகதை.

டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் ஐஸ்வர்யா  ராஜேஷ் அற்புதமாக நடித்துள்ளார். சின்ன சின்ன அசைவுகள் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்  அவர் காரை ஓட்டிக் கொண்டு நடித்திருப்பது அசாதாரணமானது. தனி ஆளாக படம் முழுவதையும் தனது தோளில் சுமந்து நிற்கிறார்
கூலிப்படையாக நடித்த மூவருமே, தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
அரசியல்வாதியாக வரும் ஆடுகளம் நரேன்.அபிஷேக், மணிகண்டன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை கதையோடு பயணிக்க  வைக்கிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் கடினமான வேலை காட்சிகளை கச்சிதமாக்கியிருக்கிறது   கார் கவிழும் காட்சியை மிகவும் மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதை, திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை எடுத்திருக்கிறார்   இயக்குநர் கின்ஸ்லி  படத்தின் கதை பெரும்பாலும் கார் பயணத்திலேயே நிகழ்கிறது.பரபரப்பான சாலையில் விரைந்து ஓடும் கார் அது சம்பந்தப்பட்ட காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நம்மைக் கட்டிப் போடுகின்றன.


Comments

Popular posts from this blog