‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ -  விமர்சனம்
அவதார்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் நவிக்கள் வாழும் பண்டோரா உலகத்தை அழித்து, அந்த இடத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்வார்கள். இதில் நாயகன் ஜாக் சல்லிக்கும், கர்னல் மைல்சுக்கும் இடையில் யுத்தம் நடக்கும். இதில் கர்னல் தோற்று விட, பண்டோராவை விட்டு ஆகாயவாசிகள் சென்று விடுவார்கள். அதன் பிறகு ஜாக் சல்லியும் நேத்ரியும் தங்களுடைய குழந்தை சகிதமாக மகிழ்ச்சியாக பண்டோரா உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெரும் படையுடனும் ஆயுத பலத்துடனும், நாயகன் ஜாக் சல்லியை அழிக்க கர்னல் வருகிறார்.
அவரிடமிருந்து தப்பிக்க ஜாக் சல்லியும் அவனது குடும்பமும் கடல்வாசிகளான மெட்கயினாவுடன் அடைக்கலம் ஆகிறார்கள். அங்கேயும் ஜாக் சல்லியை தேடி கர்னல் நெருங்குகிறார். கடல் வாழ் ராட்சத மீன்களின் அபூர்வ திரவத்தை மனித இனத்தின் தேவைக்காக அபகரிக்க முயலும் இன்னொரு குழுவும் இன்னொரு திசையிலிருந்து வருகிறார்கள். கடல்வாசிகளும் வனவாசிகளும் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்?  ஜாக் சல்லி தனது குடும்பத்தினரை காப்பாற்றினார்?  இல்லையா? என்பதே ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் கதை..
பல கலைஞர்களின் உழைப்பில் உருவான இந்த படம் நம்மை உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு வெகுவாக கை கொடுத்திருக்கிறது எனறே சொல்லலாம். கற்பனைக்கு எட்டாத காட்சிகளை படமாக்குவதில் தன்னை மிஞ்ச இன்னொருவர் கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன்
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இனம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, முக்கியத்துவம், போன்றவற்றை இந்த திரைப்படத்தில் காட்டியது மட்டும் இல்லாமல் குழந்தைகளை பெற்றோர் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து கிளைமாக்ஸில் மிக அருமையாக காட்டியிருப்பார் மேலும் காடுகள் கடல் என இரண்டிலுமே ரசிகர்களை கொண்டு செல்வது வித்தியாசமாக அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog