“நோக்க நோக்க”  - விமர்சனம்
திகில் மர்மம் நிறைந்த  திரைப்படம் நோக்க நோக்க...

தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அர்ஜுன் சுந்தரம், சிந்தியா இருவரும் காதலித்து வருகிறார்கள் வேலை விஷயமாக  நாயகன் வெளியூர் செல்கிறார்.  நாயகி  மட்டும் தனியாக தங்கி இருக்கும் அந்த வீட்டில் குழந்தை பேய் ஒன்று பயமுறுத்துகிறது . இதே வேளையில் பிரபலமான  இருவர்  கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலை பலி  நாயகி மீது விழுகிறது. இறுதியில் சிறுமி பேய் எதற்காக நாயகியை  துரத்துவதற்கான காரணம் என்ன? என்பதே  “நோக்க நோக்க” படத்தின் மீதிக்கதை.
நாயகன் அர்ஜுன் சுந்தரம் பார்ப்பதற்கு அழகாவும் நடிப்பில் புதியவர் போன்று தோன்றாத விதத்தில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் . நாயகி சிந்தியா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

நேர்மையான நிருபர்  ஜோதிராய்  அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். செய்யும் வேலையை துணிச்சலாக செய்யும் வீர பெண்ணாக நடித்திருக்கிறார். சிறுமி பேயாக வந்து நடிப்பில் மிரட்டுகிறார்.

கொலை வழக்கை  துப்பறியும் அதிகாரியின் உதவியாளராக மக்கள் தொடர்பாளர் கணேஷ் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கஞ்சா கருப்பு  மொபைல் போனால் எப்படி தனது குடும்பம் பாதிக்கம்படுகிறது  என்பதை மிக அழுத்தமான நடிப்பில் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்  விஜய் முத்துசாமி  ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன . ஆல்டிரின்,இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப உள்ளது.

இணையத்தில் கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்குவதாக திரைக்கதை அமைத்துள்ளனர்.இயக்குனர் R.முத்துக்குமார்  இவர் தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம் தெலுங்கில் ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி, சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

நடிகர்கள் : அர்ஜுன் சுந்தரம், சிந்தியா, கஞ்சா கருப்பு, ஜோதி ராய்,ஜாகுவார் தங்கம்

இசை : ஆல்டிரின்

இயக்கம் :  R.முத்துக்குமார்

மக்கள் தொடபு : கணேஷ்

Comments

Popular posts from this blog