காலங்களில் அவள் வசந்தம்’ – விமர்சனம்

காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறார் நாயகன் கௌஷிக்  தன்   காதலை ஹெரோஷினியிடம்  சொல்ல இருக்கும் போது. நாயகனின் அப்பா நெருங்கிய நண்பரின் மகள் அஞ்சலி நாயர் நாயகன் வீட்டிற்கு வருகிறார்  அப்போது  நாயகன் மீது காதல் கொள்கிறார். அவரை திருமணமும் செய்துக்கொள்கிறார்.
திருமணத்திற்கு பிறகு நாயகன் கௌஷிக் மனைவியை காதலிக்கிறார். ஆனால், அஞ்சலியோ உன்னுடைய காதல் செயற்கைத்தனமாக இருக்கிறது, மனதளவில் நீ காதலிக்கவில்லை, என்று சொல்லிவிடுகிறார்.  இறுதியில் நாயகன் மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா?  இல்லையா ? என்பதே  ’காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் கதை.
அறிமுக  நாயகன்  கௌஷிக் ராம் முதல் படம் என்று நம்ம முடியாத அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரைக்கும் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அஞ்சலியை காதலிக்கவும் முடியாமல் காதலி ஹீரோஷினியை கைவிடவும் முடியாமல் கௌஷிக் படும் பாடு எதார்த்தமாக இருக்கிறது.
நாயகி அஞ்சலி நாயர், மிக அழகாக இருக்கிறார். இப்படம் ஒரு சரியான திரைப்படம். அதை மிகவும் திறம்பட பயன்படுத்தியுள்ளார் என்றே கூறவேண்டும். கணவனின் அன்புக்கு ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.
இரண்டாம் நாயகியாக வரும் ஹெரோஷினஇவரின் உண்மைக் காதல் என்ன என்பதை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கௌஷிக்கின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ கச்சிதமாக செய்திருக்கிறார். மருமகளின் நிலைக்கண்டு இறங்கி அவளை திடமான முடிவு எடுக்கச் சொல்லி வற்புறுத்திகளில் நல்ல மனிதனாகவும் தெரிகிறார்
லொள்ளு சபா சுவாமிநாதன், விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயா சுவாமிநாதன் ஆகியோர்  சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஹரியின் இசையில் ஹே பப்பாளி உள்ளிட்ட பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. காட்சிகளை கதாபாத்திரங்களையும் அழகாக காட்டியிருக்கிறார்.
காதலை மையமாக கொண்டு எத்தனை படங்கள் வந்தாலும், ரசனையோடு சொல்லப்படும் காதல் படங்களை  கணவன் - மனைவிக்குள்  உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும்  என்பதை மிக  எளிமையாகவும புரியும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்  இயக்குநர் ராகவ் மிர்தாத்.

Comments

Popular posts from this blog