சர்தார் - விமர்சனம்
சர்தார் ( அப்பா கார்த்தி)  ராணுவ உளவாளியாக இருக்கிறார். அவரை தேசத்துரோகி என்று இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார். இதனால் அவருடைய குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. முப்பது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் காவல் துறை அதிகாரியாக வலம்வருகிறார் சர்தாரின் மகன் விஜய பிரகாஷ்  ( மகன் கார்த்தி). தேசத்துரோகியின் மகன் என்னும் அவப்பெயரிலிருந்து விடுபடுவதற்காக காவல் துறை அதிகாரியாக தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெறவைக்கிறார் .

இதற்கிடையே பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் குடிநீர் தனியார் மயக்கமாக்குவதை எதிரத்து  போராடி வரும் லைலா.மர்மமான முறையில் இறக்கிறார். அவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க விஜய் பிரகாஷ் (மகன் கார்த்தி) முயற்சி செய்யவே பல அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிந்து கொள்கிறார். லைலா மரணத்திற்கு காரணம்  என்ன ?   சர்தார் கார்த்திக் செய்த தவறு என்ன? என்பதே  சர்தார்’ படத்த்தின் கதை.

நாயகன் கார்த்தி இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறார் அதிலும் வயதான வேடத்துக்குக் கூடுதலாக சிறை கதவை திறந்துக்கொண்டு ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும்போது விசில் சத்தம் பறக்கிறது. 
நாயகியாக நடித்திருக்கும் ராஷி கன்னா மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் லைலா. கதையின் முக்கியமான திருப்பத்துக்கு உதவும் கதாபாத்திரம்
தந்தை கார்த்தியின் மனைவியாக வரும் ரஜிஷா விஜயன்  சிறப்பாக செய்திருக்கிறார். லைலாவின் மகனாக நடித்திருக்கும் பிரபல யூடியூபர் ரித்விக் சிறப்பு.அவன் வரும் காட்சிகள் வரவேற்புப் பெறுகின்றன. சித்தப்பாவாக வரும் ராமதாஸ் யூகி சேது ஆகியோரின் நடிப்பு  வில்லனாக சங்கி பாண்டே நடிப்பில்  மிரட்டுகிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,பின்னணி இசை  படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு

இயக்குனர் பி எஸ் மித்ரன்  தண்ணீர் பிரச்சனையை பற்றி பேசி இருக்கிறார்.தண்ணீர் தனியார்மயத்தின் தீமைகளையும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.


Comments

Popular posts from this blog