ரெண்டகம்  - விமர்சனம்
மும்பை தாதாவான அரவிந்த்சாமி  ஒரு விபத்தில் தன் பழைய நினைவுகளை மறந்து விடுகிறார்.  தாக்குதலின் போது அவரிடம் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதனை தற்போது மீட்டெடுப்பதற்காக ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. இதற்காக குஞ்சக்கோ போபனை அனுப்பி வைக்கின்றனர்.

குஞ்சக்கோ போபன் அரவிந்த் சாமியிடம் நண்பனாக பழகி, நினைவை இழந்த மங்களூருக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமிக்கு பழைய நினைவு திரும்ப வந்ததா? இல்லையா?  என்பதே  ‘ரெண்டகம்’  படத்தின்  கதை.
சினிமா தியேட்டரில் பார்ப்கார்ன் வியாபாரியாக மிக அமைதியான மனிதராக அறிமுகமாகும் அரவிந்த்சாமி, பழைய நினைவுகளை மறந்த கதாப்பாத்திரத்தில்  நடித்து பாராட்டுக்களை பெறுகிறார்.
குஞ்சக்காபோபனுக்கு  வேடம்.ஈஷாரெப்பாவுடனான காதல்காட்சிகள் ஆடுகளம் நரேனுடனான பாசக்காட்சிகள், அரவிந்த்சாமியுடனான பயணக்காட்சிகள்  நடிப்பில் வெற்றி பெறுகிறார். குஞ்சக்கோ போபனின் காதலியாக வரும் ஈஷா ரெப்பாவின் அழகிலும், கவர்ச்சியிலும் அனைவரையும் ஈர்க்கிறார்

கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவில் படம் பிரமாண்டமாக இருப்பதோடு, ஒவ்வொரு காட்சிகளும்  விருந்தாக  இருக்கிறது. அருள்ராஜ் கென்னடியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
அரவிந்ந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது தொடக்கத்தில் பயணிக்கும் படம், இடைவேளைக்குப் பிறகு வேகம் எடுப்பதோடு, விறுவிறுப்பாகவும்  ரசிக்க வைக்கிறார் இயக்குனர்


Comments

Popular posts from this blog